வெளிப்படையாக இருங்கள்!

அரசியலாக இருந்தாலும் சரி, தொழிற்துறையாக இருந்தாலும் சரி... முதலில் அவற்றுக்குத் தேவை வெளிப்படைத் தன்மை. ஆனால் சமீபகாலமாக இரண்டிலும் அந்தத் தன்மை குறைந்து கொண்டே வருகிறது. அரசியலைப் பொறுத்தவரை கட்சியும் தலைமையும் தங்களுக்கு நல்லது செய்யும் என்ற நம்பிக்கையில் மக்கள் அவற்றுக்கு ஆதரவளிக்கிறார்கள். அதேபோல் நிறுவனங்களும் நல்ல முறையில் செயல்பட்டு, தங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் என்ற நம்பிக்கையில்தான் அதன் பங்குகளை வாங்கி ஆதரவளிக்கிறார்கள்.

அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, நிறுவனத் தலைவர்களாக இருந்தாலும் சரி... ஆதரிப்பவர்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள விரும்பும்பட்சத்தில், தங்கள் நடவடிக்கைகளில் வெளிப்படையாக இருக்க வேண்டியது அவசியத்திலும் அவசியம். ஆனால் அப்படித்தான் நடக்கிறதா?

. இவர்களின் நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் என்ன ஆகுமோ என்ற சந்தேக வளையங்கள் சூழ ஆரம்பித்திருக்கின்றன. சீனா, பிரேசில் போன்ற நாடுகளோடு போட்டி போட்டு வளர்ந்துவிடுவோம் என்று நம் மீது நம்பிக்கை வைத்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்கூட, ஸ்பெக்ட்ரம் போன்ற விவகாரங்களால் இப்போது ஒதுங்கி நிற்கத் தொடங்கி இருக்கிறார்கள்..
வாக்காளர்களையும் முதலீட்டாளர்களையும் ஒருசேரப் புறந்தள்ளிவிட்டு அரசியல்வாதிகளும் நிறுவனங்களும் குறுக்குவழிகளைப் பின்பற்றி கைகுலுக்கிக் கொள்வது நாட்டுக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காது. லாப நோக்கத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று நினைத்தால் வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும். இதை இருதரப்பும் இனியாவது புரிந்து கொள்வது அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது!

- ஆசிரியர்