Published:Updated:

வழித்துணையாக வரும் நாணயம்!

வழித்துணையாக வரும் நாணயம்!

பிரீமியம் ஸ்டோரி
வழித்துணையாக வரும் நாணயம்!
 ##~##

பெருமை நிறைந்த தருணத்தில் நாமெல்லாம் நிற்கிறோம். நாணயம் விகடன் முதல் இதழ் தொடங்கி இந்த எட்டாம் ஆண்டு சிறப்பிதழ் வரை, ஒரு வாரம்கூட விடாமல் படித்து வருவதோடு, அவற்றை பொக்கிஷம் போல சேர்த்து வைக்கும் வாசகர்களைப் பற்றி அறியும்போது அந்தப் பெருமை பன்மடங்கு கூடுகிறது.

'வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை ஒரு பாலபாடமாக கற்க ஆரம்பித்து, இந்த எட்டாம் ஆண்டில் கிட்டத்தட்ட ஒரு பல்கலைக்கழக பட்டத்துக்கு நிகராக அறிவைப் பெற்று நிற்கிறேன்’ - இப்படி உணர்வுபூர்வமாக வாசகர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதங்கள் மேஜையின் மீது குவிந்து கிடக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் படிக்கும்போது 'நாணயம் விகடனின்' பொறுப்பும் எந்தளவுக்குக் கூடி இருக்கிறது என்பது நன்கு புரிகிறது.

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், கமாடிட்டி, கரன்சி என ஒவ்வொரு விதமான 'மார்க்கெட்'டிலும் ஏற்றங்கள் வரும்போது  தட்டிக்கொடுத்து வாசகர்களின் முதலீட்டு ஆர்வத்தைத் தூண்டியும்... இறக்கம் வரும் முன்பே சுட்டிக்காட்டி சரிவிலிருந்து காப்பாற்றியும் வருகிறது நாணயம் விகடன்.

ஏழு ஆண்டு காலம் என்ற இந்த நீண்டகால அறிவு முதலீட்டில் இணை பிரியாமல் நம்மோடு நடை போட்டு வந்த வாசகர்களுக்கு நன்றாகத் தெரியும் - அவர்கள் அடைந்துள்ள லாபம் எத்தனை என்று! மேலும் மேலும் முன்னேறும் தாகம் கொண்ட வாசக அன்பர்களே... வாருங்கள் தொடர்ந்து எங்களோடு! உங்கள் குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் நீங்கள் தொடரப் போகும் முதலீட்டுப் பயணத்தில் உங்களுக்கு ஏற்ற வழித்துணையாக நாணயம் எப்போதும் இருக்கும்.                  

- ஆசிரியர்.

வழித்துணையாக வரும் நாணயம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு