பிரீமியம் ஸ்டோரி
ஹலோ வாசகர்களே...

நிதி அமைச்சரின் விபரீதச் சிந்தனை!

வங்கி ஒழுங்குமுறை மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கமாடிட்டி சந்தையில் வர்த்தகம் செய்ய வங்கிகளுக்கு அனுமதி தரக்கூடாது என எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் இந்த எதிர்ப்பு நியாயமானதே. காரணம், கமாடிட்டி சந்தை என்பது அதிக ஏற்ற, இறக்கம் கொண்டது. தனிமனிதர்கள் இந்த ஏற்ற, இறக்கத்தில் இருக்கும் ரிஸ்க்கைக் கற்றுக்கொண்டு பணத்தைப் போட்டு லாபம் சம்பாதிக்கலாம். ஒருவேளை நஷ்டம் கண்டாலும் அது அவர்களுடன் முடிந்துவிடும். ஆனால், மக்கள் பணத்தில் இயங்கும் வங்கியானது கமாடிட்டி சந்தையில் இறங்கி நஷ்டம் கண்டால், அனைவருமே பாதிப்படைவார்கள்.

கமாடிட்டி வர்த்தகத்தை ஓரளவு கரைத்துக் குடித்த வெளிநாட்டு வங்கிகள் இந்த அனுமதி கேட்கலாம். ஆனால், அந்த வர்த்தகத்தின் நெளிவுசுளிவுகளை பெரிய அளவில் அறியாத நம் வங்கிகளுக்கு அனுமதி தருவது சரியில்லையே! தவிர, கமாடிட்டி சந்தையைக் கட்டுப்படுத்தும் ஃபார்வேர்டு மார்க்கெட் கமிஷனுக்குத் தற்போதுள்ள அதிகாரம் போதாது. அதற்கு கூடுதல் அதிகாரம் தந்தபிறகே வங்கிகளுக்கு இம்மாதிரியான அனுமதி கொடுக்க யோசிக்கலாம்.  

மேலும், இந்தியாவில் பேசில்-3 விதிமுறைகளை நடைமுறைப்படுத்த ரூ.4.75 லட்சம் கோடி தேவை. அதற்கு வங்கிகளைத் தயார்படுத்துவதை விட்டுவிட்டு,  இந்த விபரீதச் சிந்தனை தேவைதானா? யோசியுங்கள் நிதி அமைச்சரே!

- ஆசிரியர்.

ஹலோ வாசகர்களே...
ஹலோ வாசகர்களே...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு