புரையோடிக் கிடக்கும் ஊழல் புற்றுநோய்!

இன்றைக்கு இந்தியாவை மிரட்டும் மிகப் பெரிய பிரச்னை, ஊழல்தான். இதுநாள் வரை அரசு அலுவலகங்களில்தான் ஊழல் தலைவிரித்தாடுவதாக நினைத்தோம். ஆனால் சமீபத்திய அதிர்ச்சி, தனியார் நிறுவனங்களிலும் இந்தப் புற்றுநோய் புகுந்து அதன் ரத்தநாளங்களை சேதப்படுத்தி வருகிறது என்பதற்கு தணிக்கை நிறுவனமான கே.பி.எம்.ஜி. வெளியிட்ட சர்வே ரிப்போர்ட்டே மிகச் சிறந்த உதாரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த சர்வேயின்படி, 2010-ல் தங்கள் நிறுவனங்களில் ஃபிராடு சம்பவங்கள் நடக்கிறது என்றவர்கள் 44 சதவிகிதம். ஆனால், அதுவே 2012-ல் 55 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. 94 சதவிகிதத்தினர் ஊழல்கள் கண்டுபிடிக்கவே முடியாதபடிக்கு நுணுக்கமாகச் செய்யப்படுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், 71 சதவிகிதத்தினர் மோசடிகள் செய்யாமல் பிஸினஸே நடப்பதில்லை என்று கூறியிருப்பது நிலைமை எந்தளவுக்கு மோசமாகி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
##~## |
ஊழலை ஒழிக்க, நேர்மையற்ற வழியில் பணத்தைச் சேர்க்கத் தடைவிதிக்கும் சட்டங்களை வலுவாக்கவேண்டும். நேர்மையான வழியில் மட்டுமே சம்பாதிக்க நினைக்கிறவர்களுக்கு சட்ட பாதுகாப்பு, வரிச் சலுகைகள், மானிய உதவிகள் போன்றவற்றை அளிக்கவேண்டும்! மனிதர்களிடமிருந்து நம்பிக்கை தொலைவதே, நேர்மை தொலைவதற்கான ஆரம்பம் என்பதை மறந்துவிடக் கூடாது.
- ஆசிரியர்.

