Published:Updated:

அன்பு வாசகர்களே!

அன்பு வாசகர்களே!

அன்பு வாசகர்களே!

அன்பு வாசகர்களே!

Published:Updated:

ஏமாற்றம் தந்த தேசிய வளர்ச்சி கவுன்சில்!

அன்பு வாசகர்களே!

டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் பெரும் ஏமாற்றத்துடன் முடிந்திருக்கிறது. நம் நாடு அதிவேக வளர்ச்சி காண அற்புதமான திட்டம் எதுவும் இல்லை; வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் எந்த உருப்படியான யோசனையும் இந்தக் கூட்டத்தில் சொல்லப்படவில்லை.    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்த ஐந்தாண்டுகளில் நாம் அடையவேண்டிய வளர்ச்சி இலக்கை நிர்ணயித்து, அதற்கான திட்டங்களைத் தீட்டுவதற்குத்தானே இந்தக் கூட்டம்? இந்தியாவின் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டம் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது நடக்கவேண்டாமா? இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பல்வேறு மாநில முதல்வர்கள் நாட்டின் வளர்ச்சி குறித்து தங்கள் கருத்துகளைச் சொல்ல அரை மணி நேரமாவது தரவேண்டாமா?

##~##
வெறும் பத்து நிமிடமே பேச அனுமதித்ததை எதிர்த்து கவுன்சில் கூட்டத்திலிருந்து நம் முதல்வர் வெளிநடப்பு செய்தது சரியே. பத்து நிமிடம் பேச, ஏன் பல லட்சம் செலவழித்து ஒருவர் டெல்லிக்குச் செல்லவேண்டும்?

அடிக்கடி வெளிநாடு சென்று உருப்படியாக எதையுமே சாதிக்காத பிரதமருக்கு நாட்டின் அதிமுக்கியமான ஐந்தாண்டு திட்டம் பற்றி மாநில முதல்வர்களுடன் பேச நேரமில்லை என்பது, இந்த அரசிடம் சொல்லிக்கொள்ளும்படி எந்தத் திட்டமும் இல்லை என்பதையே காட்டுகிறது.

- ஆசிரியர்.

அன்பு வாசகர்களே!
அன்பு வாசகர்களே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism