Published:Updated:

கையில் வெண்ணெய் இருக்கு...!

கையில் வெண்ணெய் இருக்கு...!

கையில் வெண்ணெய் இருக்கு...!

கையில் வெண்ணெய் இருக்கு...!

Published:Updated:
##~##

பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பதன் மூலம் வருமானத்தை உயர்த்த முடிவு செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அதே பாணியை இந்தியாவிலும் பின்பற்றி, இங்குள்ள பெரும் பணக்காரர்களுக்கு விதிக்கப்படும் வரியை இன்னும் கொஞ்சம் உயர்த்துவதன் மூலம் அரசு வருமானத்தைப் பெருக்கமுடியுமா என்று யோசனை சொல்லி இருக்கிறார் பிரதமரின் பொருளாதார ஆலோசகரும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான டாக்டர் சி.ரங்கராஜன்.

பெரும் பணக்காரர்களுக்கு 40 சதவிகிதமாக இருந்த வரியை 30 சதவிகிதமாகக் குறைக்க நடவடிக்கை எடுத்தவரே இப்போது நிதி அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம்தான். அதிக வரி விதிப்பு, வெளிநாடுகளுக்கு கறுப்புப் பணமாக திசை திரும்பும் என்று அப்போது காரணமும் சொல்லப்பட்டது. அப்படி செய்தவர் இப்போது மீண்டும் வரியை உயர்த்த முன்வருவாரா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம் நாட்டின் பெரும் பணக்காரர்கள் எவ்வளவு பேர் இருந்தாலும் சரி... கணக்கில் வராத பணத்தை அதிகம் பதுக்குபவர்கள் பெரும்பாலும் அரசியல் தொடர்புடையவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் வரி உயர்வையும் ஊக்குவிக்கமாட்டார்கள்... பதுக்கலையும் நிறுத்தமாட்டார்கள்.

வருமானத்தைப் பெருக்குவதற்கு நடைமுறையில் செல்லத்தக்க பல நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கவும் இல்லை... பிரதமர் உட்பட அமைச்சர்களின் வெட்டியான வெளிநாட்டுப் பயணச் செலவுகளை குறைக்கவும் இல்லை. தவிர, அரசாங்கம் போடுகிற திட்டங்களில் பல உரிய காலத்தில் நிறைவேறாததால் பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் வீணாகப் போகிறது. நிறைவேறாத இந்தத் திட்டங்களின் மூலம் ஊழல்தான் பெருத்துள்ளது. இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டினாலே அரசாங்கத்துக்கு நிறைய வருமானம் கிடைக்குமே!

எல்லாவற்றுக்கும் மேலாக, வெளிநாடுகளில் கிடக்கும் பல லட்சம் கோடி ரூபாய்  கறுப்புப் பணத்தை நம் நாட்டுக்கு கொண்டுவர இந்த அரசாங்கம் இதுவரை எந்த முயற்சியையும் எடுக்கவில்லையே! கையில் கட்டியாக வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைவதுபோல பேசுவது யாரைக் காப்பாற்ற..?

கையில் வெண்ணெய் இருக்கு...!

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism