Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

கூடும் கட்டணம்... கூடாத வசதி!

##~##

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்து இருக்கிறார் ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால். இந்தக் கட்டண உயர்வுக்கு காங்கிரஸின் கூட்டணியில் இருக்கும் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. 'மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுபோல் நடிக்கவாவது செய்ய வேண்டுமே' என்ற கவலையைத்தான் அதில் பார்க்க முடிகிறது. ஓராண்டுக்கு முன் பஸ் கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும்கூட, இந்த ரயில் கட்டண உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்று குரல் கொடுப்பதில் இருந்தே 'அரசியலை' புரிந்துகொள்ளலாம்.

கடந்த பத்து ஆண்டுகளில் காய்கறி உள்பட விலைவாசி எல்லாமே ஏறிப்போயிருக்கும் நிலையில், ரயில் கட்டணத்தை மட்டும் உயர்த்தக் கூடாது என்று சொல்ல முடியுமா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ரயில்வே துறையிடம் இருந்த பணம் 17,500 கோடி ரூபாய். இது 2011-12-ம் ஆண்டு கணக்கின்படி, வெறும் 65 கோடியாகத் தேய்ந்து கட்டெறும்பு ஆகிப்போனது. இதையெல்லாம் காட்டி, 'இப்படியே போனால் ரயில்வே துறை நொடிந்து, கடனுக்காக கையேந்தும் நிலை ஏற்படும்' என்ற வாதங்களையும் புறக்கணிப்பதற்கு இல்லை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹலோ வாசகர்களே..!

அதேசமயம், நுகர்வோரின் நலன்களைப் பராமரிப்பதில் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு முன்னேறும் இந்த காலகட்டத்தில், அரசாங்க சேவைகள் மட்டும் படு கேவலமாகவே இருப்பது என்ன நியாயம்? கட்டண உயர்வில் மட்டும் தனியாருடன் போட்டி போடுவதும், தரத்தில் பாதாள அளவிலேயே தேங்கி நிற்பதும் எத்தனை பெரிய அவமானம்!

தூரந்தோ போன்ற ரயில்களில் கூடுதலாகக் கட்டணத்தைக் கொடுத்துவிட்டு கரப்பான் பூச்சி மற்றும் எலிகளோடு சேர்ந்து பயணம் செய்யும் பயணிகளின் பரிதாபமும், சாபமும் மத்திய அரசை எட்டவே இல்லையா? கட்டண உயர்வு என்ற முடிவைத் துணிந்து எடுத்த ரயில்வே அமைச்சர், பாதுகாப்பும் வசதியும்மிக்க பயணத்துக்கும் சீக்கிரமே உத்தரவாதம் தரவேண்டும். இல்லாவிட்டால், அரசாங்கம் எடுக்கின்ற நியாயமான சில முடிவுகளையும் கூட மக்கள் முன் நியாயப்படுத்த முடியாமல் போய்விடும்!