Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
##~##

'வந்தாச்சு பெப்பர் ஸ்பிரே’, 'இருக்கவே இருக்கிறது கராத்தே', '24 மணி நேர ஹெல்ப்லைன் அமைச்சாச்சுல்ல' என்பது போன்ற விழிப்பு உணர்வு பிரசாரங்கள் கொடிகட்டுகின்றன. பெண்களின் பாதுகாப்புக்கான 'ரோபாட் காலணி’ கண்டுபிடிப்பு என்கிற செய்தியும்கூட மீடியாக்களில் படபடக்கிறது. கூடவே, 'என்ன இருந்தாலும், நாம

ஜாக்கிரதையா இருக்கறதுலதான் எல்லாமே இருக்கு!' என்கிற உஷார் அட்வைஸ்களும் வந்து விழுகின்றன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே...

ஒருவகையில் பார்க்கப் போனால்.. இதுபோன்ற உஷார் அட்வைஸ்களை ஓரங்கட்டி விடக்கூடாது என்றே தோன்றுகிறது தோழிகளே!

போலீஸ், ஹெல்ப்லைன், ஸ்பிரே, கராத்தே, காலணி... எல்லாமே 'ஓ.கே’தான். ஆனால், இவையெல்லாமே பாதிக்கப்படும் நேரத்தில் அல்லது பாதிக்கப்பட்ட பின் வந்து நிற்பவை. ஆனால், உஷார் அட்வைஸ்களுக்கு மனதின் ஒரு மூலையில் கொஞ்சமேனும் இடம்கொடுத்தால்... சரியான நேரத்தில் எச்சரிக்கை மணி அடித்து, வரும்முன் காத்துவிடும்தானே!

இதைப் பற்றி சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அபிலாஷாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது...

''வீதியில் ஒரு குற்றம் நடந்தால்... அது நமக்கு நேர்ந்துவிட்ட குற்றமாகக் கருதும் மனப்பான்மைதான், நம்மை எப்போதுமே விழிப்பு உணர்வு அடைய வைக்கும். 'வீட்டில் தெரிந்தால் திட்டுவார்களோ' என்கிற பயத்தில் பல பிரச்னைகளை மறைத்து விடுகிறோம். இதுவும்கூட இங்கே குற்றங்களை அதிகரிக்கச் செய்யும் காரணியே. உடனடியாக நண்பர்களிடமோ அல்லது பெற்றோரிடமோ... தெரியப்படுத்தினால்... அவர்கள் சொல்லும் யோசனை, பிரச்னைகளுக்கு நிச்சய தீர்வாகத்தான் இருக்கும்.

பெண்களுக்கு எதிராக பல குற்றங்கள் நடப்பதற்கு முக்கிய காரணமே... போதிய தைரியமின்மைதான். இளம் பருவத்திலிருந்தே எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை அவர்களிடத்தில் விதைத்து வளர்க்க வேண்டும். உஷார் யுக்திகளையும் சொல்லிப் பழக்க வேண்டும். குற்றங்கள் நடப்பதற்கான காரணிகளை, நம்முடைய சூழல்களே பெரும்பாலும் தீர்மானிக்கின்றன என்பதை உணர்வதுதான் முதல் பாதுகாப்பு!'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் தோழிகளே!

உரிமையுடன்

நமக்குள்ளே...


ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism