Published:Updated:

பொன்முட்டை வாத்துகளை அறுக்காதீர்கள்!

பொன்முட்டை வாத்துகளை அறுக்காதீர்கள்!

பொன்முட்டை வாத்துகளை அறுக்காதீர்கள்!

பொன்முட்டை வாத்துகளை அறுக்காதீர்கள்!

Published:Updated:
##~##

ராட்சஸ சுறா மீன்கள் வலைக்கெல்லாம் சிக்காது அல்லது வலையையே தின்றுவிடும், அதேபோல மிகச் சிறிய மீன்களும் வலை இடுக்குகள் வழியாகத் தப்பித்துவிடும். ஆனால், நடுத்தர மீன்கள் எந்த வலையை விரித்தாலும் மாட்டிக் கொள்ளும். இதுதான் மாதச் சம்பளக்காரர்களின் நிலையும். பெரும் பணக்காரர்களில் பலர் அரசின் வரி வலையில் சிக்குவதில்லை. வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் வரியைப் பற்றி கவலைப்பட தேவை இல்லை. ஆனால், மாதச் சம்பளக்காரர்களிடம் மட்டும்தான் அரசாங்கம் வரியை சுலபமாக வசூலித்து விடுகிறது.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்த மாதச் சம்பளக்காரர்களுக்கு அத்தியாவசிய செலவுகளான  உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், பஸ் கட்டணம், ரயில் கட்டணம், வீட்டு வாடகை, கடன் வட்டி உள்ளிட்ட அனைத்தும் பல மடங்கு உயர்ந்து வருவது பணவீக்கம் 10%-க்கு மேல் இருப்ப திலிருந்தே தெரிகிறது. இது போதாதென்று கல்வியும் மருத்துவமும் இன்று பலருக்கும் எட்டாக் கனியாகப் போய்விட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், ஒருவரின் வருமானம் முழுவதும் செலவுக்கும் வரிக்குமே போய் விட்டால், சேமிப்பு என்பது எள்ளளவும் இல்லாமல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை இந்த அரசு உணர வேண்டும். மாதச் சம்பளக்காரர்கள் பொருளாதார ரீதியாக இன்னும் நலிவடையாமல் இருக்க அவர்களுக்குத் தற்போதைய தேவை, அதிக வரிச் சலுகைகள். அடிப்படை வரிவிலக்கு வரம்பை 2 லட்சத்திலிருந்து குறைந்தபட்சம் 2.5 லட்சமாகவும், சேமிப்புக்காக 80சி பிரிவின் கீழ் விலக்குக் கொடுக்கப்படும்

1 லட்சத்தை, குறைந்தபட்சம் 1.25 லட்சமாகவும் உயர்த்தவேண்டும். மக்கள் அதிகமாக நிதிச் சந்தைகளில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக அதிக சலுகைகள் வழங்கப்படவேண்டும்.

நூறு சதவிகிதம் சரியாக வரிச் செலுத்தும் மாதச் சம்பளக்காரர்களுக்கு மேலும் நெருக்கடி கொடுக்காமல், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பட்ஜெட்டை அமைப்பது அரசின் தலையாய கடமை. அதைவிடுத்து, பொன்முட்டையிடும் நடுத்தர வர்க்கத்து அப்பாவி வாத்துகளை வரிச் சுமை என்ற கத்தியின் மூலம் ஒரேயடியாக அறுத்துப் பார்க்க ஆசைப்படலாமா அரசாங்கம்?

- ஆசிரியர்.

பொன்முட்டை வாத்துகளை அறுக்காதீர்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism