Published:Updated:

மக்களை ஏமாற்றிய பட்ஜெட்!

மக்களை ஏமாற்றிய பட்ஜெட்!

மக்களை ஏமாற்றிய பட்ஜெட்!

மக்களை ஏமாற்றிய பட்ஜெட்!

Published:Updated:
மக்களை ஏமாற்றிய பட்ஜெட்!

ப்புசப்பில்லாத விஷயத்தைக்கூட பிரமாதம், பிரமாதம்! என்று புகழ வைத்துவிடுகிற திறமை சிலருக்கு இருக்கும். சிதம்பரத்துக்கும் அப்படி ஒரு திறமை இருக்கவே செய்கிறது. ஏறக்குறைய எல்லாத் தரப்பினருக்கும் ஏமாற்றத்தை அளிக்கிற மாதிரியான ஒரு பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்திருந்தாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கருதிதான் அவர் அப்படி செய்திருக்கிறார் என பலரும் சொல்கிற அளவுக்கு ஒரு 'பேலன்ஸ்டு’ பட்ஜெட்டைத் தந்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம்.

வெளிப்புறத்தில் கவர்ச்சியாகத்தான் தெரியும் இந்த ஒய்யாரக்கொண்டை பட்ஜெட்டில். விலைவாசியைக் கட்டுப்படுத்த உருப்படியான திட்டமில்லை. பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மூலதனத்தை உருவாக்குவதற்கான சேமிப்பை உயர்த்துவதற்கு எந்தவிதமான திட்டங்களும் இல்லை. பணவீக்கத்தால் கடும் சிரமத்தில் உள்ள நடுத்தரவர்க்க மக்களுக்கு  வரி வரம்பைக் கொஞ்சம்கூட உயர்த்தவில்லை. உள்நாட்டின் வளர்ச்சியை ஊக்குவித்து, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துகிற செயல்திட்டங்களுக்கான தெளிவான பாதை வகுக்கப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதை எல்லாம் செய்வதற்கு பதில், அந்நிய நாட்டு முதலீட்டாளர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தந்திருக்கிறார். ஆனால், அடுத்த ஓராண்டு காலத்தில் பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தச் சமயத்தில் நடுத்தரவர்க்கத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பதிலாக, வெளிநாட்டு தரச் சான்று அளிக்கும் நிறுவனங்களிடம் நல்ல பெயர் வாங்கி என்ன புண்ணியம்? உள்ளூர் மக்கள் பாராட்டிச் சீராட்ட வேண்டாமா?

நிதிப் பற்றாக்குறை, உலகப் பொருளாதாரம் சரியில்லை என பல்வேறு காரணங்களைக் காட்டி புதிய திட்டங்களைத் தொடங்க பணம் இல்லை என அமைச்சர் சொன்னாலும், தற்போதையச் சிக்கலுக்கு கடந்த 4 ஆண்டுகளாக காங்கிரஸ் கடைப்பிடித்த தவறான பொருளாதாரக் கொள்கையே தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்? ஊழல் மலிந்துகிடக்கும் இன்றைய ஆட்சி அதிகாரத்தில், எத்தனை ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்தாலும் அது ஒரு சிலரின் 'கை’களில்தானே குவியப் போகிறது? முதலில் ஊழலை ஒழித்துக்கட்டுங்கள். பிறகு நல்ல பட்ஜெட்டைப் போடுங்கள்.

- ஆசிரியர்.

மக்களை ஏமாற்றிய பட்ஜெட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism