Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
##~##

ந்த முறை தோழிகளுடன் எதைப் பற்றி பேசலாம் என்று யோசித்தபடியே... இணையப் பக்கங்களில் மேய்ந்து கொண்டிருந்தபோது, 'மீண்டும் டெல்லி பாலியல் பலாத்காரம்...', 'ராஜஸ்தான் பாலியல் வன்முறை', 'உத்தரப்பிரதேச பாலியல் பலாத்கார கொலை' என்று அடுக்கடுக்காக கண்முன்னே விரிந்த செய்திகள், என்னை திகிலின் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிட்டன!

டெல்லியில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த பாலியல் பலாத்கார கொலையைத் தொடர்ந்து, 'இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் பெண்கள் தனியாக செல்ல வேண்டாம். குழுவாக செல்லுங்கள்' என்று இங்கிலாந்து போன்ற உலக நாடுகள் தங்கள் நாட்டுப் பெண்களுக்கு எச்சரிக்கை செய்தி தந்து, இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிக் கொண்டிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே...

'பாலியல் பலாத்காரங்களுக்கு இனி அதிகபட்சமாக மரண தண்டனை' என்று சட்ட திருத்தமும்கூட செய்தாகிவிட்டது.

இந்நிலையிலும் கூட, அத்தகைய சம்பவங்கள் இங்கே குறைவதாகக் காணோம்! 'டெல்லியில் காரிலேயே பலாத்காரம் செய்யப்பட்ட பெண், நிர்வாண நிலையில் காரிலிருந்து வெளியே வீசப்பட்டார்' என்று கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகியிருக்கும் செய்தி பீதியை அதிகமாக்குகிறது!

இந்தக் கொடுமை இப்படியென்றால்... பாதுகாப்பு தரவேண்டிய காவல்துறையே பாதிக்கப்பட்டவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பதை என்னவென்று சொல்வது? உத்தரப்பிரதேச மாநிலம், அலிகர் நகரில் ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு காவல் நிலையம் சென்றார் அவளுடைய தாய். அந்தக் கண்ணீருக்கு பதில் சொல்லத் திராணியற்ற போலீஸ், அவரை லத்தியால் அடித்து விளாசியிருக்கிறது. அந்தத் தாயைக் கீழே தள்ளி, முடியைப் பிடித்து போலீஸ் இழுத்து செல்லும் கொடூரக் காட்சிகளை உங்களில் பலரும் டி.வி-யில் பார்த்து பதறியிருக்கக் கூடும்.

கீழ்நிலைக் காவலர்கள்தான் இப்படியென்றால், 'அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு யார் சாட்சி?' என்று கேட்டு அதிகார வர்க்கத்தின் நிஜமுகத்தை தன் பங்குக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் அவர்களின் உயர் அதிகாரி.

'இதற்கு முன்பு இங்கே இருந்த கலெக்டர் அழகானவர். ஆனால், அவரைவிட நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்!’ என்று பெண் கலெக்டரிடம் பல பேர் முன்பாக உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஒருவரே கூசாமல் பேசுகிறார் என்றால், சாதாரண ஆண்களின் மனதில் பெண்களைப் பற்றிய பிம்பம், 'வெறும் போகப் பொருள்' என்பதாகத்தானே படிந்திருக்கும்?!

எல்லாம் என்றுதான் மாறுமோ?!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism