Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
##~##

'டிஸ்கவர் த டீன், வித் இன் யூ!’ என்பது மிகவும் பிரபலமான வாக்கியம். 'உங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் பதின்பருவத்தை, மீண்டும் வெளிக்கொணர முடியும் என்றால், அது உங்கள் வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சிகரமானதாக மாற்றியமைக்கும்' என்பதுதான் இதன் பொருள்!

அதற்கான வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கத்தான் வருகிறது... 'ஜாலி டே’!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த இதழிலேயே அதற்கான அறிவிப்பை பார்த்துவிட்டு, நீங்கள் 'ஹேய்' என்று எழுப்பிய உற்சாகக் குரல், சென்னை வரை அலைமோத ஆரம்பித்துவிட்டது. வாசகிகள் ஒவ்வொருவரையும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவிருக்கும் மகிழ்ச்சியில், 'அவள் விகடன்' குழுவும் அதே உற்சாகத்தில் திளைக்கிறது!

நமக்குள்ளே...

இதழ்தோறும் உங்களோடு பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். உங்களின் படைப்புகள் துவங்கி, நீங்கள் எழுதி அனுப்பும் விமர்சனங்கள் வரை நிறைய விஷயங்களை படித்துக்கொண்டேதான் இருக்கிறோம். போனில்கூட எங்களுடன் உரையாடுகிறீர்கள். புத்தம் புதிய கருவியான 'ஃபேஸ்புக்' மூலமாகவும் நிறைய பேசத் தொடங்கிவிட்டோம். ஆனால், நேருக்கு நேராக சந்திப்பதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு, இணை இல்லைதானே! அதிலும், உங்களுக்காக... எங்களை புதுப்பித்துக் கொள்ளும் அரியவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நாளாகவும், 'ஜாலி டே’ அமைந்திருப்பதில் எங்களுக்கு இரட்டை மகிழ்ச்சி!

நீங்கள், கடைசியாக ஆசை தீர வாய்விட்டு பாடியது எப்போது..? தோழிகளோடு சேர்ந்து உற்சாகத் துள்ளல் போட்டது என்றைக்கு..? வாய்விட்டு சிரித்தது எந்த சந்தர்ப்பத்தில்..? இப்படியெல்லாம் கேட்டால், யோசித்து பதில் சொல்லும் நிலையில்தானே பலரும் இருக்கிறீர்கள்! இனி யோசிக்காமலே சட்டென்று சொல்லுமளவுக்கான களம்தான் 'ஜாலி டே’! ஆம், ஆண்டு முழுக்க குடும்பத்தையும் குழந்தைகளையும் பார்த்துக்கொண்டே இருக்கும் உங்களுக்கு, ஓரிரு நாட்களுக்காவது உற்சாகம் வேண்டாமா... அதற்கான குளூக்கோஸை உடம்பில் ஏற்றிக் கொள்ள வேண்டாமா... கால இயந்திரத்தில் ஏறாமலேயே, உங்களின் பதின்பருவ காலத்துக்குள் உலாவி வர வேண்டாமா!

அதற்காகவே, கடந்த ஆண்டுகளின் 'ஜாலிடே'க்களில் இடம்பிடித்த முக்கிய அம்சங்களுடன், மாறும் காலத்துக்கு ஏற்ற புத்தம்புது அம்சங்களையும் சேர்த்துக் கொண்டு, உங்களையெல்லாம் கொண்டாட ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூருக்கு வருகிறது இந்த 'ஜாலி டே’! உங்கள் ஒவ்வொருவரையும் எதிர்பார்த்து அங்கே காத்திருப்போம். தயாராகுங்கள் தோழிகளே... அந்த இனிய திருநாளைக் கொண்டாட!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism