Published:Updated:

மத்திய அரசாங்கம் இனியாவது செயல்படட்டும்!

மத்திய அரசாங்கம் இனியாவது செயல்படட்டும்!

ஹலோ வாசகர்களே..!

##~##

ஊழல், பணவீக்கம் உள்பட பல்வேறு பிரச்னைகளில் ஏற்கெனவே சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு மேலும் ஒரு பேரிடியாக வந்து சேர்ந்திருக் கிறது வேலை வாய்ப்பு குறித்து சமீபத்தில் வெளியான சிறப்பு சர்வே முடிவு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மத்திய அரசாங்கம் இனியாவது செயல்படட்டும்!

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தபோது 42 சதவிகிதமாக இருந்த வேலை வாய்ப்பு, 2011-12-ல் 38.6 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. 2010, ஜனவரியில் 98 லட்சமாக இருந்த வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை இரண்டே ஆண்டுகளில் 108 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

அதிரவைக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் நிர்வாக லட்சணத்தைத் தோலுரித்துக் காட்டுவதன்றி வேறென்ன! கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் தங்கள் சொந்த நலனுக்காக நாட்டின் பொருளாதாரத்தையே பலி கொடுத்ததன் விளைவுதானே இந்தச் சறுக்கல்! அலைக்கற்றையில் ஆரம்பித்து நிலக்கரியை ஒதுக்கீடு செய்வது வரை அனைத்திலும் ஊழல் பூதம் நர்த்தனம் ஆடியதால்தானே இன்றைக்கு பல லட்சம் பேர் வேலை இல்லாமல் திண்டாடித் திரியவேண்டி இருக்கிறது!

மத்திய அரசாங்கம் இனியாவது செயல்படட்டும்!

போனதெல்லாம் போகட்டும், இனியாவது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில், இந்த அரசாங்கம் வேகமாகச் செயல்படட்டும். இந்தியா முழுக்க சாலை வசதிகளைப் பெருக்கும் திட்டங்களைச் செயல்படுத்தட்டும். மின் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் தொழிற்சாலைகள் தொடர்ந்து நடத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கட்டும். உற்பத்தியைப் பெருக்குகிற மாதிரி இன்னும் பல புதிய தொழிற்சாலைகளை உருவாக்கட்டும். தேங்கிக்கிடக்கும் திட்டங்களை எல்லாம் மீண்டும் முழுவேகத்தில் முடுக்கிவிடட்டும். உற்பத்தித் துறையோடு, சர்வீஸ் துறையிலும் நாம் கவனம் செலுத்தினால்தான் அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்கிற நோக்கத்தை முழுமையாக அடைய முடியும்.

இன்னும் சில மாதங்கள்தானே இருக்கப்போகிறோம் என காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நினைக்காமல் உடனே களத்தில் இறங்கி காரியத்தைச் செய்தால்தான் இதையெல்லாம் நிறைவேற்ற முடியும். செய்வார்களா?

- ஆசிரியர்.