பிரீமியம் ஸ்டோரி
##~##

வ்வொரு நாளும் வாசகிகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். என்றாலும், கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த சந்திப்புகள்... ரொம்பவும் ஸ்பெஷல். ஆம், அடுத்தடுத்து பல நூறு வாசகிகளை நேருக்கு நேர் சந்திக்கும் இனிமையான வாய்ப்பு கிடைத்ததே!

முதலில், ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் கோவையில் நிகழ்ந்த ஜாலி டே. அடுத்தது... ஜூன் 23 அன்று சென்னையில் நடைபெற்ற 'வீட்டுத் தோட்டம் போடலாம் வாங்க’ பயிற்சிக் கருத்தரங்கு!

மிகநெருக்கமான உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு, வெகு முன்னதாகவே ஆஜராகி, அந்த இடத்தையே கலகலப்பாக்குவது போல... விருந்து உபசாரங்கள் எல்லாம் முடிந்த பிறகும், சொந்தபந்தங்களை விட்டுப் பிரிய மனமே இல்லாமல், கும்பல் கும்பலாக கூடி நின்று பேசிக்கொண்டே இருப்பதுபோல... இரண்டு நிகழ்ச்சிகளிலும் வாசகிகள் காட்டிய பாசம்... அளப்பரியது!

நமக்குள்ளே...

குறிப்பாக, சென்னை நிகழ்ச்சியின் தேநீர் இடைவேளையின்போது... மகப்பேறு மருத்துவ நிபுணர் சுமதி, ஒரு வாசகியாக என்னிடம் பேசியதை உங்களிடம் பகிரத்தான் வேண்டும்.

''உடன் வேலை செய்யும் இன்னும் மூன்று பெண் டாக்டர்களும் சேர்ந்துதான் இங்கு வரத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், எங்கள் தொழிலுக்கே இருக்கும் 'அவசர வேலைகள்' குறுக்கிட... எனக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. ஒரே சூழலில், ஓயாமல் வேலை பார்க்கும் எங்களைப் போன்றவர்களுக்கு, 'அவள் விகடன்' நடத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிகப்பெரிய ரிலீஃப். அதிலும் இந்த வீட்டுத் தோட்டம் நிகழ்ச்சி... நூறு சதவிகித பலனை இப்போதே கொடுத்துவிட்டது. பாவம்... அந்த மூன்று பேரும்தான் மிஸ் செய்துவிட்டனர்.''

இதுமட்டுமா... 'அவள் விகடன்' இதழில் வெளியாகும் பகுதிகள் பற்றி சிலாகித்து வெளிப்படுத்திய கருத்துக்கள்; அவற்றை எப்படியெல்லாம் மெருகேற்றலாம் என்று உரிமையோடு தந்த டிப்ஸ்கள்; இதழ் மூலம் கிடைத்த பயன்களுக்காக சமர்ப்பித்த நன்றிகள்... என்று இரு நிகழ்வுகளிலும் வாசகிகள் காட்டிய ஆர்வம், எங்களை நெக்குருகச் செய்தது.

இத்தகைய இனிய பகிரல்கள்தான்... எங்களுக்கான ரீ-சார்ஜ் என்பதே உண்மை. இதற்காக, நன்றி பாராட்ட வேண்டியது நாங்களே! ஆம்... 'இங்கிவளை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்' என்றே, உங்கள் ஒவ்வொருவரையும் நினைத்து எப்போதும் பெருமைப்படுகிறோம்!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு