Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
##~##

ல்லத்தரசிகளை... 'உள்துறை அமைச்சர்’, 'நிதித்துறை அமைச்சர்’ என்கிற இரண்டு 'செல்ல' வார்த்தைகளில் குறிப்பிடுவது உண்டு. இவை வெறுமனே அலங்காரத்துக்காக சொல்லப்படுபவையல்ல... நூற்றுக்கு நூறு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் என்பது... 'பாரத ஸ்டேட் வங்கி'யின் நிர்வாக இயக்குநர் பொறுப்பை விரைவில் அலங்கரிக்கக் காத்திருக்கும் 'அருந்ததி பட்டாச்சாரியா' மூலம் மீண்டும் உறுதியாகி இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு நலிவுற்றிருந்த இந்தியன் வங்கியை,        ரஞ்சனா குமார் எனும் பெண், மீண்டும் தலைதூக்க வைத்தபோதே... 'பணத்தை நிர்வகிக்கும் திறன், பெண்களுக்கு இத்தனை இயல்பாக வருகிறதே...?!’ என்றுதான் எல்லோருமே புருவத்தை உயர்த்தினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின்னே... அரிசிப் பானை, உப்புப் பானை என்று காசை சேமித்த அந்தக் காலம்தொட்டே... 'சேமிப்பு' என்பது பெண்களின் கைவந்த கலையாயிற்றே! சிட்டுக்குருவி மாதிரி இப்படி சேர்த்து வைக்கும் பணத்தை, குண்டுமணித் தங்கமாக மாற்றுவதில் அம்மாக்கள், பாட்டிகள்தானே இன்றைக்கும் ரோல்மாடல்கள்!

நமக்குள்ளே...

சில ஆண்டுகளுக்கு முன்... ஐ.சி.ஐ.சி.ஐ எனும் தனியார் வங்கியில் பணியாற்றிய அனுபவத்துடன் தேனீக் கூட்டம் போல பெண் வங்கியாளர்கள் வெளியில் பறந்து வந்தபோது... பல்வேறு வங்கிகளின் தலைமைப் பொறுப்புகள் அவர்களை அரவணைத்துக் கொண்டன. ஜெ.பி.மோர்கன் (இந்தியா) நிறுவனத்தின் தலைவராக இருக்கும் கல்பனா மோர்பாரியா, ஆக்ஸிஸ் வங்கியின் ஷிகா ஷர்மா, மல்டிப்பிள் ஆல்டர்நேட் நிறுவனத்தின் ரேணுகா ராம்நாத் போன்றோர் அங்கே உருவான ராணித் தேனீக்களே!

இவர்கள் மட்டுமா... ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சந்தா கோச்சர், ஹெச்.எஸ்.பி.சி. வங்கியின் நய்னா லால் கித்வாய், யுனைட்டெட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அர்ச்சனா பார்கவ், அலகாபாத் வங்கியின் சுபலட்சுமி, பாங்க் ஆஃப் இந்தியாவின் விஜயலட்சுமி... என்று பொதுத்துறை வங்கிகளையும் தங்களின் அயராத உழைப்பு, திறமை, பொறுமை, சாதுர்யம் ஆகியவற்றால் 'லட்சுமி கடாட்சம் பொங்கும்' இடங்கள் என தற்போது மாற்றிக் கொண்டிருக்கின்றனர் பெண்கள்.

பெண்களின் கையில் நிதி நிர்வாகம் இருந்தால், வீடு சிறக்கும் என்பார்கள். இனி... நாடும்!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism