Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
##~##

டி.வி. செய்திகளை அணைத்த பிறகும்கூட... முகத்தை கையால் மூடிக்கொண்டு இயக்குநர் சேரன் அழும் காட்சி... துவண்ட முகத்துடன் பின்னால் நிற்கும் அவருடைய மனைவி செல்வராணியின் வேதனை தோய்ந்த முகம்... ஆகியவையே மீண்டும் மீண்டும் நிழலாடுகின்றன.

'தவறான ஒரு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அப்பா, அம்மா இப்படித் துடிக்கிறார்கள் என்பதைக்கூட புரிந்து கொள்ளாமல் இருக்கிறாளே... இந்தப் பெண்' என்று சேரனின் மகள் தாமினி மீது பலருக்கும் கோபம்கூட வருகிறது. குறிப்பாக, பெண் பிள்¬ளைப் பெற்றெடுத்திருக்கும் பெற்றோர்க்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இத்தகைய காதல் காட்சிகள் பல்வேறு படங்களில், ஏன்... சேரனின் படங்களிலேயே விரிந்திருக்கின்றன. சேரனின் 'கற்பனை'களை போட்டிப் போட்டுக் கொண்டு ரசித்த அதே கூட்டம், இந்த 'நிஜங்களை' பார்த்துத் துடிக்கிறது... 'நிழல் வேறு, நிஜம் வேறு' என்கிற உண்மையை உணர்ந்தபடி!

இது, இயக்குநர் சேரன் வீட்டுப் பிரச்னை என்பதால், மீடியாக்களில் படபடக்கிறது. காவல் துறை, நீதிமன்றம் என்று எங்கு சென்றாலும், இந்த பிரச்னைக்கு ஏகப்பட்ட முக்கியத்துவமும் கிடைக்கிறது. ஆனால், இதேபோல ஆயிரமாயிரம் கதைகள், தினம் தினம் தமிழகம் முழுக்கவே நடந்து கொண்டுதானே இருக்கின்றன!

நமக்குள்ளே...

தாமினியின் காதலர் சந்துரு, நல்லவரா... கெட்டவரா... என்கிற ஆராய்ச்சிகள் முடிவடைந்து, அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு தீர்வு வருவது ஒருபக்கம் இருக்கட்டும்! இன்னொரு பக்கம்... 'ஆணோ, பெண்ணோ... உரிய வயதை எட்டிவிட்டாலே, அவரவர் விருப்பப்படி திருமணம் செய்து வைத்துவிடுவதுதான் தீர்வா?’ என்பது குறித்து அலச வேண்டிய தருணத்தில் பெற்றோர்கள் எல்லோருமே இருக்கிறோம் என்பதுதானே உண்மை!

பெண்ணோ... பையனோ சட்டப்பூர்வ திருமண வயதை எட்டிவிட்டால், திருமண வாழ்க்கையை முடிவு செய்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறதுதான். ஆனால், 'சற்றும் பொருத்தமில்லாத... ஏமாற்று பேர்வழி ஒருவரை கைபிடிக்க முடிவெடுத்துவிட்டால்... பெற்றோர் என்ன செய்ய வேண்டும்... எப்படி நடந்து கொள்ள வேண்டும்..?’ என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகள் எழுகின்றன!

தவறான வாழ்க்கைத் துணையை மட்டுமல்ல, வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட எந்த ஒரு முக்கியமான முடிவையும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்காமல், தீர ஆலோசித்து எடுக்கக் கற்றுக்கொடுப்பதும் பெற்றோரின் கடமையே என்பதை நாம் உணர்வது... பெருமளவு கைகொடுக்கும் என்றே தோன்றுகிறது. இதற்கு, அவர்களோடு நண்பர்களாக பழகினால் மட்டும் போதாது. வேலை, பிஸினஸ், ஆபீஸ், உயரதிகாரி, டார்கெட்... போன்றவற்றுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை... குழந்தைகளுக்கும் பெற்றோர் தரவேண்டும்.

ஊட்டி ஊட்டி வளர்ப்பதைவிட, ஊரையும், உலகையும் ஊட்டி வளர்ப்பதே முக்கியம்! நான் சொல்வது சரிதானே தோழிகளே!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்