அரசுக்கு ஏது கவலை?

என்.எஸ்.இ.எல். எக்ஸ்சேஞ்சில் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்குமா, கிடைக்காதா என

பல ஆயிரம் முதலீட்டாளர்கள் பரிதவித்து நிற்கும் இந்தச் சமயத்தில், அவர்களுக்கு ஆதரவாகப் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்கள் மிச்சம் மீதி வைத்திருக்கும் நம்பிக்கையையும் ஒழித்துக்கட்டுகிற மாதிரி மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் பேசி இருப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

என்.எஸ்.இ.எல். எக்ஸ்சேஞ்சிற்கு ரெகுலேட்டர் எதுவும் இல்லை என்பதை முதலீட்டாளர்கள் நன்கு தெரிந்துகொண்டுதான் அதில் முதலீடு செய்திருப்பதாகச் சொல்கிறார் மத்திய அமைச்சர். ஒரு வாதத்திற்கு அமைச்சர் சொல்வதை ஒப்புக்கொண்டாலும்கூட, முதலீட்டாளர்களுக்குத் தெரிந்த இந்த விஷயம் அரசாங்கத்திற்கு தெரியாமல் போனது எப்படி? அல்லது, ரெகுலேட்டரே இல்லாமல் அந்த எக்ஸ்சேஞ்ச் நடக்கட்டும்; என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுப்போகட்டும் என்று அரசாங்கம் தெரிந்துகொண்டுதான் அதைத் தொடர்ந்து இயங்க அனுமதித்ததா?

மேலும், ஆரம்பத்தில் லாபம் பார்த்தவர்கள் இப்போது பணத்தைத் தொலைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். வியாபாரத்தில் நஷ்டம் என்பது சகஜம் என்றாலும், இப்போது என்.எஸ்.இ.எல்.-ன் நீக்கப்பட்ட சி.இ.ஓ.வின் ஒப்புதல்படியே அங்கு நடந்தது மோசடிதான் என்பது தெளிவாகிறது.

இந்த எக்ஸ்சேஞ்சில் முதலீடு செய்த சாதாரண மனிதர்களுக்குப் பணம் திரும்பக் கிடைக்க இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஒருபக்கம் என்றால், பொதுத்துறை நிறுவனமான எம்.எம்.டி.சி.-ன் பணம் சுமார் 220 கோடி ரூபாய் என்.எஸ்.இ.எல். எக்ஸ்சேஞ்சிடம் சிக்கி இருக்கிறதே! அரசுக்கு சேர வேண்டிய இந்தப் பணத்தைத் திரும்ப வாங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுமா? அல்லது அரசு நிறுவனமும் தெரிந்துகொண்டுதானே முதலீடு செய்தது; அதனால் பணம் திரும்பாவிட்டாலும் பரவாயில்லை என்று விட்டுவிடுமா?

சந்தையில் ஏமாற்றிப் பணம் பறித்துவிட்டு தப்பிக்க வழி இருக்கின்றது என்று தெரிந்தால் பலரும் இந்தப் பாதையில் துணிச்சலாய் பயணிக்க நேரும். மக்களுக்கு சந்தை மீதுள்ள நம்பிக்கையும் குறையும். சந்தை முதலீடுகள் குறைந்தால் பொருளாதாரமும் நொண்டியடிக்கும். இந்தக் கவலையெல்லாம் எதனையாவது செய்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பதவிக்கு வந்துவிடவேண்டும் என்று துடிக்கின்ற இந்த அரசுக்கு இருக்குமா என்ன?

- ஆசிரியர்.