Published:Updated:

அன்பு வாசகர்களே

அன்பு வாசகர்களே

அன்பு வாசகர்களே

அன்பு வாசகர்களே

Published:Updated:

சீறுமா பொருளாதார சிங்கம்?

அன்பு வாசகர்களே

ண்மையில் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த அந்நாட்டின் உயரதிகாரி ஒருவர் இந்தியாவைப் பார்த்துவிட்டு வியந்துபோய் இப்படிச் சொல்லியிருக்கிறார்... ''நான் பல வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தபோது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் பயங்கர மாற்றம் தெரிகிறது. இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணம் நிச்சயமாக மன்மோகன்சிங்தான். அவர் இந்தியாவில் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்கள்தான் இன்று இந்நாட்டை இந்த அளவுக்கு மாற்றியிருக்கிறது'' என்று வியந்து பேசியிருக்கிறார். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவிச் செயலாளரான ராபர்ட் பிளேக்தான் இப்படி சொல்லியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வருங்காலத்தில் உலகப் பொருளாதாரச் சூழலோடு இந்தியா போட்டிபோட வேண்டுமென்றால் இப்போதே மாபெரும் மாற்றங்களுக்கான விதையை விதைத்தாக வேண்டும் என்ற தீர்க்க சிந்தனையோடு இருபதாண்டுகளுக்கு முன்பே புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகம் செய்தவர் மன்மோகன் சிங். அவரின் தொலைநோக்குப் பார்வைதான் நமக்கு இன்றைக்கு வல்லரசுகளோடு போட்டிபோடும் வல்லமையைத் தந்திருக்கிறது.

##~##
அப்படி ஒரு தீர்க்க தரிசனத்தோடு செயலாற்றிய மன்மோகன்சிங், இன்றைக்கு ஏன் தனது திறமைகளை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு சராசரி அரசியல்வாதியாகிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம், அதை பனிக்கட்டியாக மாற்றி! அதேபோல் மனமிருந்தால் மௌன சாட்சியாக இருக்கும் போக்கை மாற்றி, தனது அறிவுக்கூர்மையால் நாட்டை அடுத்த கட்டத்துக்கு அவரால் எடுத்துச் செல்ல முடியும். முதல்வேலையாக வெளிநாட்டு வங்கிகளில் பதுங்கியிருக்கும் கோடி கோடி கறுப்புப் பணத்தை வேட்டையாடி இந்தியாவுக்கு கொண்டுவந்து சேர்க்க தன் அறிவு சாதுர்யத்தை பயன்படுத்தலாமே இந்த பொருளாதாரச் சிங்கம்?

-ஆசிரியர்

அன்பு வாசகர்களே
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism