Published:Updated:

அன்பு வாசகர்களே

அன்பு வாசகர்களே

அன்பு வாசகர்களே

அன்பு வாசகர்களே

Published:Updated:

புதிய அரசுக்கான முதல் சவால்...!

அன்பு வாசகர்களே

ப்போதுமே புதிதாக ஒரு ஆட்சி அமையும்போது அதன் முன்னால் பல சவால்கள் காத்திருக்கும். கூடவே அரசின் கஜானாவும் காலியாக இருக்கும்! தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க-வுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் முதலில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் தனது கவனத்தை செலுத்தப் போவதாக ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். அவசியம் கவனம் செலுத்த வேண்டிய துறைதான் அது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழகத்தை அமைதிப் பூங்காவாக நீடிக்க வைக்க அவர் எடுக்கவிருக்கும் முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் நிச்சயமாக வரவேற்பார்கள். கூடவே, தொழிற் பூங்காவாக தொடருவதற்கும் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
குறிப்பாக மின்தட்டுப்பாட்டினை நீக்க போர்க்கால நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். பாலம் கட்டுவது, விளையாட்டு அரங்கங்கள் அமைப்பது, ரோடு போடுவது, பூங்கா அமைப்பது போன்ற நடவடிக்கைகளை எல்லாம் எந்த அரசு ஆரம்பிக்கிறதோ அந்த அரசின் பதவிக்காலத்துக்குள்ளேயே அது முடிந்துவிடும். அந்த அரசும் தனது சாதனையாக அவற்றை பறைசாற்றி பலன்தேடிக் கொள்ளும். ஆனால், மின்சார உற்பத்தி போன்றவை நீண்டகால நோக்கில் தீட்டப்பட வேண்டிய திட்டங்கள். அந்த திட்டங்கள் நிறைவேற பல வருடங்கள் பிடிக்கும். அதனாலேயே பல ஆட்சியாளர்கள் இத்தகைய விஷயங்களில் கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். அப்படிப்பட்ட அலட்சியங்களால்தான் இன்றைக்கு மின்தட்டுப்பாடு போன்ற விஷயங்களால் தமிழகம் தவித்துக் கொண்டிருக்கிறது. புதிய அரசாவது தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு மின் உற்பத்தி, உள்கட்டமைப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த முன்வர வேண்டும். அப்படி நடக்க ஆரம்பித்தால் என்றென்றைக்கும் தமிழகம் எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருக்கும்!

-ஆசிரியர்.

அன்பு வாசகர்களே
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism