Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
##~##

சில எண்களுக்கு - எண்ணங்களுக்கு றெக்கை கட்டும் வல்லமை உண்டு என்பார்கள். அப்படி ஓர் எண்... 16.

'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க' என்று வாழ்க்கைக்குத் தேவையான செல்வங்களை பதினாறாக வகைப்படுத்தி வைத்திருக்கும் முன்னோர்... பலவற்றையும் இப்படி பதினாறில் வைத்தே போற்றியிருக்கிறார்கள். கடவுளர்களைக்கூட... பதினாறு ரூபங்களில் வைத்து வணங்குவது நாமறிந்ததுதானே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வரிசையில், 'பளீர்' என்று தானும் இடம்பிடித்து நிற்கிறது வருஷம் 16.

இதைக் கொண்டாடுவதற்காகவே... 'அவள் 16' என்று தனிப் புத்தகம் ஒன்றையும் இந்த இதழுடன் இணைத்திருக்கிறோம். இளமை, புதுமை, இனிமை... என்று 'கலர்ஃபுல் கலக்கல்' ஆக வடிவெடுத்திருக்கும் இந்த இணைப்பிதழ்... ஒவ்வொருவரும் அடுத்த படியில் அடி எடுத்து வைப்பதற்கு கைகொடுக்கும் அம்சங்களையும் தன்னுள் சேர்த்துக்கொண்டே மிளிர்கிறது!

நமக்குள்ளே...

'அவள் விகடன்' இதழுக்குள்ளும் புத்தம் புது பகுதிகள் அலங்கரிப்பது... உங்கள் கண்களைக் கண்டிப்பாக கவரவே செய்யும்.

தினசரி சமையலை... எளிமை மற்றும் சுவையாக சமைக்கச் சொல்லித் தரும் செஃப் தாமு!

நமக்கும், நம் வீட்டுக் குழந்தைகளுக்கும் 'எது காதல்.. எது கானல்?’ என்று இனம்பிரித்தறியும் சூத்திரத்தை, நிஜம் மற்றும் நிழல் உலக அனுபவங்களிலிருந்து எடுத்துச் சொல்லும் இயக்குநர் சுசீந்திரன்!

வீடு, அழகால் நிரம்பும்போது... மனதும் ஆனந்தத்தால் நிரம்பும்தானே. வீட்டின் அழகு ப்ளஸ் குடும்பத்தின் குதூகலம் பற்றி பிரபலங்கள் பேசும் 'ஆனந்தம் விளையாடும் வீடு’!

நமக்கே நமக்கான அழகை, பாதகமில்லாமல் மெருகேற்றிக்கொள்ள கற்றுத்தரும் 'பாரம்பரியம் Vs பார்லர்'!

பொருளாதார ரீதியில் உயர... 'கைகொடுக்கும் கிராஃப்ட்'!

ஒவ்வொரு துறையையும் அடி முதல் நுனி வரை உங்கள் பார்வைக்கு படம்பிடிக்கும் 'அ முதல் ஃ வரை'!

- இப்படி புரட்டப் புரட்ட புதுமை கொண்டாட்டம்!

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல... உங்களின் மனதை மகிழ்விக்கும், உங்களின் எழுத்தாற்றலை மெருகேற்றும், உங்களின் அறிவுக்கு சவால் விடுக்கும்... கலக்கல் ப்ளஸ் கலாட்டா போட்டிகளுக்கான ரெடி, ஸ்டார்ட் அறிவிப்பும் உண்டு. மொத்த மாக 3 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட பரிசுகள் காத்திருக்கின்றன தோழிகளே! களம் இறங்குங்கள்... கலக்குங்கள்!

வழக்கம்போல இதழ் பற்றிய விமர்சனத்தையும் எழுதி அனுப்பிவிடுவீர்கள்தானே!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism