Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
##~##

திக்கரைகளில் தோன்றிய நாகரிகங்கள் பலவும் அழிந்த கதை நாமறிவோம். இங்கே, தீபாவளி சிறப்பிதழுக்காக கன்னியாகுமரி மாவட்டத்தின், தாமிரபரணி நதிக் கரைக்கு சென்ற நம் நிருபர்... மெள்ளத் தொலைந்து கொண்டிருக்கும் 'நம் நாகரிக' எச்சங்களைக் கண்டெடுத்து வந்திருக்கிறார்.

பள்ளிக்கூடத்துக்கே போகாத 78 வயது மூதாட்டி ரத்னாபாய், இந்த தள்ளாத வயதிலும், 'ஏற்பது இகழ்ச்சி’ என்கிற உறுதியோடு... அந்த நதியில் படகோட்டி பிழைத்துக் கொண்டிருக்கிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துடுப்புப் போட உடம்பில் தெம்பில்லை. என்றாலும், அக்கரைக்கும் இக்கரைக்கும் இடையே கயிறு ஒன்றை கட்டி, படகை செலுத்தும் இந்த மூதாட்டிக்கு... ஊரில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடம் சென்று படித்து, பெரியவர்களாக வேண்டும் என்று பேரவா! ஏழைகளாக இருந்தால், படகுக்கான இரண்டு ரூபாய் கூலியைக்கூட வாங்காமல், தன் உழைப்பை தானமாகக் கொடுப்பதில் பாட்டிக்கு பேரானந்தம்!

நமக்குள்ளே...

இப்படி ஈகை, சேவை மனப்பான்மை, தன்மானம்... என அனைத்தின் கலவையாக தோன்றும் அந்த மூதாட்டியை, 'முந்தைய நாகரிக'த்தின் வாழும் சின்னம் என்று சொல்லலாம்தானே!

தனித்தே வாழும் ரத்னாபாய், உள்ளூர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதிலேயே தன் பிறவிப் பயனை அடைந்து கொண்டிருக்கிறார். ஆனால்... மகன், மருமகள், பேரன், பேத்தி என்று அத்தனை சொந்தங்களும் கண்முன்னே நடமாடினாலும்... யாருமற்றவர்களாக வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இவர்கள், நாம் ஒவ்வொருவரும் இன்று இருக்கும் இந்த உருவெடுத்து நடமாட, மண் பிசைந்தவர்கள்தானே... நமக்காகவே வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்தானே! இவர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு... 'மகன், மருமகள், பேரக்குழந்தைகள் நம்மோடு பேச வேண்டும்... உறவாட வேண்டும்' என்பதாகத்தான் இருக்கும், பெரும்பாலும்!

'அடச்சே, பொல்லாத இந்த வாழ்க்கைப் போராட்டத்தில்... பின்னங்கால் பிடரியில்பட ஓடும் வேகத்தில்... இதையெல்லாம் மறந்துவிட்டோமே...' என்று யோசிக்கத் தோன்றுகிறதுதானே!

நடந்தவை... நடந்தவைகளாகவே இருக்கட்டும். இனி, நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்!

ஆம்... மகிழ்ச்சி பொங்கும் இப்பண்டிகையிலிருந்தாவது... ஒடுங்கிக் கிடக்கும் நம் 'நாகரிக சின்னங்களை' உற்சாகப்படுத்த ஆரம்பிப்போம்!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism