Published:Updated:

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

Published:Updated:
ஆசிரியர் கடிதம்
ஹலோ வாசகர்களே,
 

லகம் முழுக்க வேரூன்றி செழித்து வளர்ந்திருக்கிற ஃபேமிலி பிஸினஸ்’ என்ற பரம்பரைத் தொழில்கள் நாட்டின் பொருளாதாரத்தையே உயர்த்துகின்றன. இதில், எப்படிச் செயல்பட்டால் வெற்றிகரமாக லாபம் ஈட்ட முடியும் என்ற சிறப்புக் கட்டுரை ஒன்றை இந்த இதழில் கொடுத்திருக்கிறோம். குடும்பத் தொழில் செய்வோரும், செய்ய நினைப்போரும் ‘கிளாசிக் போலோ’ ஷிவ்ராம் சொல்லி இருப்பதைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.

‘தொழில் தொடங்கலாம் வாங்க!’ பகுதியில் வெளியாகும் கட்டுரைகளுக்கு உங்களிடமிருந்து வரும் அமோக ஆதரவு, எங்களை அடுத்த கட்டத்திலும் சிந்திக்கத் தூண்டியது. ‘தொழில் தொடங்க ஆசைதான். அதற்கு முந்தைய காலகட்டத்தில் எப்படியெல்லாம் தயாராக வேண்டும்’ என்கிறவர்களுக்கெல்லாம் அஸ்திவாரப் பணிகள் பற்றிய கட்டுரையை போனஸாகத் தந்திருக்கிறோம். எந்தத் தொழில் செய்ய நினைப் பவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் அதில் உள்ளன.

வேலைவாய்ப்புத் தகவல் சொல்லும் ஜாப் நியூஸ் பகுதியில், புது ரத்தம் பாய்ச்சி இருக்கிறோம், பாருங்கள். ‘ஊர்’வலம் பகுதியில் கொடுத்து வந்த மதிப்பெண் குறியீட்டை முழுமையாக்கி, துறைவாரியாக ‘டாப் டென்’ பட்டியல் போட்டு இருக்கிறோம். அலுவலக ஊழியர்களுக்கு டிப்ஸ் சொல்லும் முக்கியஸ்தர்கள், சிறு கேள்விச் சோதனை நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்... உங்கள் தேடல்களைப் புரிந்துகொண்டு நாங்கள் செய்து இருக்கும் இதுபோன்ற இனிய மாற்றங்கள் உங்களை நிச்சயம் ஈர்க்கும்.

பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் என்று துறைவாரியாக வரும் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வரும் வாசகர்கள், அவற்றில் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள சந்தேகங்கள் எழுப்பிக் கடிதம் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்காக, இந்த இதழில் இன்ஷூரன்ஸ் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும் பகுதியைத் துவங்கி இருக்கிறோம். இதுபோன்ற கடிதங்களை அனுப்பும்போது, அந்தப் பகுதியின் தலைப்பிட்டு கடிதம் எழுதுங்கள். யாரிடம் கேட்க விரும்புகிறீர்கள்? என்பதையும் குறிப்பிட்டால் வந்து குவியும் ஏராளமான கடிதங்களிலிருந்து பிரித்தெடுத்து, வேகமாகப் பதில் பெற்றுத் தருவது எங்களுக்கு இலகுவாக இருக்கும்.

சென்னைக்கு வந்து சென்ற தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, ஷிவ் நாடார், உலகின் மிகச்சிறந்த மார்க்கெட்டிங் குருவான ஃபிலிப் காட்லர் ஆகியோரது சந்திப்புகளும் உள்ளன.

ரியல் எஸ்டேட் துறையில் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...இனிக்கும் லாபம் தரும் குடை மிளகாய்... டீச்சர் வேலைவாய்ப்பைத் தரும் பயிற்சிப் பள்ளிகள்... தொழிலில் மந்த நிலையைப் போக்கி புத்துயிர் ஊட்ட துணைநிற்கும் பிஸினஸ் ஆலோசனைகள்... என்று உங்கள் எதிர்காலத்தை வளமாக்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளே உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

படியுங்கள்... பணத்தைப் பெருக்குங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism