Published:Updated:

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

ஆசிரியர் கடிதம்
ஹலோ வாசகர்களே,
 

 

‘கு ழந்தைக்குப் பெயர் வைப்பது மாதிரிதான் தொழிலுக்குப் பெயர் வைப்பதும். அடையாளம் இல்லாத தொழில் அடுத்தகட்ட வளர்ச்சி பெறாது!’ என்பதை அழுத்தமாகச் சொல்லும் கட்டுரையைத் தந்திருக்கிறோம். சிறுதொழிலில் ஈடுபட்டு இருக்கும் தயாரிப்பாளர்களே, இதைப் படித்துவிட்டு, அடுத்தகட்டத்துக்கு வளருங்கள்.

நல்லபடியாக வியாபாரம் செய்துகொண்டிருப்பவர்கள், தங்கள் துறையில் சூப்பர் மேன் ஆக என்ன செய்ய வேண்டும் என்று தன் அனுபவ அறிவுரை சொல்லி இருக்கிறார் சி.கே.ஆர். அவர் தரும் லேட்டஸ்ட் டிப்ஸ்களைப் படித்து நிமிரும் வியாபாரிகளே, இனி உங்கள் வாடிக்கையாளர்கள் அத்தனை பேரையும் புதிய கோணத்தில் அணுகுங்கள்!

‘மத்திய அரசு, தேவையற்ற பிரச்னைகளில் தன் சக்தியை, விலை மதிப்பற்ற நேரத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறதே!’ என்ற கவலையோடு தன் சிந்தனைகளை ஆலோசனைகளாகச் சொல்கிறார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் கட்டுரை எழுத்தாளருமான ப.ஸ்ரீ.ராகவன். அதை உன்னிப்பாகக் கவனியுங்கள்!

நாளுக்கு நாள் ஏறிவரும் எரிபொருள் விலையைக்கண்டு மிரண்டிருக்கும் வாகன ஓட்டிகளுக்காக இரண்டு சிக்கன யோசனைகளைச் சொல்லி இருக்கிறோம். ‘ஃப்யூவல் சேவர்’ என்ற புதிய கருவி, காசைக் குறைக்கும் ஐடியாவைப் பாருங்கள்!

‘பத்திரப் பதிவுத் துறையில் வந்திருக்கும் புதிய சட்டத்தை வைத்து எப்படிப் பணம் பண்ணலாம்?’ என்று சொல்லி இருக்கிறார் வாசகர் ஜெகதீஷ். அவர் சொல்லும் யோசனையைக் கேளுங்கள்!

‘ஆயிரம் ரூபாய் - வாசகர் சவாலி’ல் புதுமையான சாக்ஸை விற்று சக்கைப்போடு போட்டிருக்கிறார் சென்னை வாசகர். ‘கப்’பென்று அவர் பிடித்த புதுமையைத் தெரிந்துகொள்ள பக்கங்களைப் புரட்டுங்கள்!

சுமாராக வரையத் தெரிந்தவர்களும் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கும் வாய்ப்பாக, கண்ணாடி ஓவியத் தொழில் தொடங்கும் வழிமுறைகளை விவரித்திருக்கிறோம். அதேபோல, பெருகிவரும் வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே ஒரு ஏஜென்ட் போலச் செயல்பட்டு, வருமானம் பார்க்கும் குடும்பத் தலைவி அபர்ணாவையும் அறிமுகம் செய்திருக்கிறோம். வேலை தரும் அந்த வேலைக்கு குடும்பத் தலைவிகள் முயற்சியுங்கள்.

கும்பகோண நகரத்தில் இருக்கும் தொழில் வாய்ப்புகள்... விவசாயி களுக்கு லாபம் தரும் சீனித்துளசி... முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டும் மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜரின் பேட்டி... பெண்களைத் தலைமைப் பதவிக்கு வரத்தூண்டும் சூப்பர் டிப்ஸ்கள்... ஆபத்துகாலப் பாதுகாப்புக்கு உதவும் காப்பீடு குறித்த நித்ய கல்யாணியின் கட்டுரை... வீடு வாங்குவதில் இருக்கிற தயக்கங்களை உதறச்செய்யும் வங்கிக் கடன் வகைகள்... என்று உங்களுக்குப் பயன்படும் அத்தனை விஷயங்களையும் பார்த்துப் பார்த்துச் சேர்த்திருக்கிறோம், படியுங்கள்...

பணத்தைப் பெருக்குங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz