Published:Updated:

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

Published:Updated:
ஹலோ வாசகர்களே
ஹலோ வாசகர்களே,
 

நா ணயம் விகடனின் இந்த ஆறு மாதப் பயணத்தில், வெற்றி இலக்கை நோக்கி மின்னலாக முன்னேறும் அணியில் கைகோத்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது மனதுக்கு உற்சாகம் தருகிறது.

புதிய வாசகர்கள் பலரும் நம் அலுவலகத்துக்கு போன் செய்து, ‘ஆஹா, இத்தனை நாள் இப்படி ஒரு பொக்கிஷத்தை மிஸ் பண்ணி விட்டோமே!’ எனச் சொல்கிறார்கள். எங்கே போய்விடும் வாய்ப்புகள்..? உலகத்தின் சுழற்சி இருக்கும்வரை பணம் பண்ணும் ஃபார்முலா இருந்துகொண்டேதான் இருக்கும். உங்களுக்காக புதிய புதிய தொழில்களை, பணத்தைப் பெருக்கும் வழிகளைத் தேடித் தேடி தந்துகொண்டே இருப்போம்.

இன்னும் சிலர், ‘ஒவ்வொரு இதழிலும் நீங்கள் கொடுக்கும் தொழில் அல்லது முதலீட்டு விஷயங்களைப் படிக்கும் போதெல்லாம் இதைப் பண்ணலாம்... இதை முயற்சிக்கலாம்! என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. முன்பு எதில் இறங்கப் போகிறோம்... என்ன செய்யப் போகிறோம் என்று இருந்த குழப்பம் போய், இப்போது எதை சாய்ஸில் விடுவது என்ற குழப்பம் அதிகரித்திருக்கிறது!’ என்று சந்தோஷமாகச் சலித்துக் கொள்கிறார்கள். ஏன் அவசரப்படுகிறீர்கள்..? உங்களுக்குப் பொருத்தமான வாய்ப்பு வரும்வரை காத்திருந்து நிதானமாக முடிவெடுங்கள்.

நாணயத்தால் லாபம் அடைந்த பலரும் மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சி யோடும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அப்படி ஒரு பெட்டிக்கடைக்காரரின் பேட்டி, இந்த இதழில் உள்ளது. உங்கள் முன்னேற்றம், வருமானம்... எங்கள் சந்தோஷம்!

இந்த வாரம் பள்ளிகள் திறக்கும் வாரம். அதை வைத்து எப்படி காசு பார்க்க முடியும். சில ஸ்கூல் டிப்ஸ்களைத் தந்திருக்கிறோம். பொருத்தமான இடத்தில் பயன்படுத்தி பலனடையுங்கள்.

பங்குச் சந்தை பாதாளத்துக்குப் பாய்ந்துவிட்ட சோகத்தில் இருக்கிறார்கள் முதலீட்டாளர்கள். ‘இந்தச் சூழலில் என்ன செய்ய வேண்டும். இரட்டையர் களிடம் ஒரு அட்வைஸ் அறிக்கை வாங்கித் தாருங்கள்!’ என்று உரிமை யோடும் நம்பிக்கையோடும் கேட்ட வாசகர்களின் அன்புக்கு எப்படி நன்றி சொல்வது..? தெளிவான கட்டுரையாகவே கொடுக்கச் செய்திருக்கிறோம். அதில் ஆறுதலையும் தைரியத்தையும் உற்சாகத்தையும் அழகாகத் தந்திருக்கிற நாகப்பன் - புகழேந்தி, துன்பம் வரும் வேளையிலே சிரிக்கச் சொல்கிறார்கள்.

இன்ஷூரன்ஸ் எத்தனை பெரிய கடல்..! ஆச்சர்யமும் நாம் அறிந்திராத மர்மங்களுமாக இருக்கிற ஒரு பிரமாண்டத்துக்குள் உங்களை அழைத்துச்செல்ல, இதோ இந்த இதழில் இருந்து களமிறங்கி இருக்கிறார் நித்ய கல்யாணி. பாதுகாப்பான பயணத்துக்குத் தயாராகுங்கள்.

விவசாயிகளுக்குப் பயன்படும் கெர்கின்ஸ், கடைதேடி வந்து கடன் சேவை செய்யும் வங்கி, வீட்டுக்குள்ளே வர ஆரம்பித்திருக்கிற ஆபீஸ் வேலை, உங்கள் மாத பட்ஜெட் எப்படி இருந்தால் லாபகரமாக இருக்கும் என்று இலவசமாகச் சொல்லித் தருகிற நிறுவனம், கட்டுமானச் செலவைக் குறைக்க உதவும் வீரப்பனின் டிப்ஸ், ஒரே முதலீட்டில் பல வருமானம் பார்க்க வழிசொல்லும் சி.கே.ஆரின் ‘மூளை’தனம் என்று பக்கத்துக்குப் பக்கம் உங்களுக்குப் பயன்படும் கட்டுரைகளின் அணிவகுப்பு காத்திருக்கிறது.

உன்னிப்பாகப் படியுங்கள்.... பணத்தைப் பெருக்குங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism