Published:Updated:

நாணயம் என் நண்பன்!

நாணயம் என் நண்பன்!

நாணயம் என் நண்பன்!

நாணயம் என் நண்பன்!

Published:Updated:
நாணயம் நம் நண்பன்!
நாணயம் என் நண்பன்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாணயம் என் நண்பன்!

‘‘நா ணயம் விகடன், படித்தேன். அதில் வந்திருந்த வாய்ப்பைப் பயன்படுத்தியதில், இன்று மாதம் 750 ரூபாய்க்கு மேல் கூடுதலாக சம்பாதிக்கிறேன்’’ என்று நெகிழ்கிறார் சேலம் ஐந்து ரோட்டில் கடை வைத்திருக்கிற இர்ஃபான்.

இவர் நாணயம் வாசகர். ‘‘என் போன்ற கடைக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக, புதிய தொழில் வாய்ப்புகளைச் சொல்லும் நண்பனாக வந்து கொண்டிருக்கிறது நாணயம் விகடன். அதில் இருக்கும் பல பகுதிகளைப் படித்து, நானும் என் நண்பர்களும் நிறைய லாபம் அடைந்திருக்கிறோம்’’ என்று நமக்கு அனுப்பிய கடிதத்தில் புளகாங்கிதப்பட்டிருந்தார்.

‘‘கடந்த இதழில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள கடைக்காரர்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கடைதோறும் மணி கட்டி இருக்கிறார்கள் என்ற தகவலைப் பார்த்ததும், ‘அட... நம்மைப் போன்ற கடைக்காரர்களைப் பற்றிய செய்தி வந்திருக்கிறதே... நாம் நாணயத்தால் லாபமடைந் ததைச் சொல்லலாமே என்று தோன்றியது’’ என்று ஆரம்பித்தார் இர்ஃபான்.

நாணயம் என் நண்பன்!

‘‘கட்டு கைக்கு வந்தவுடனே முதலில் அதைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதே பெரிய மகிழ்ச்சி. தொடர்ந்து நாணயம் இதழ்கள் வந்தவுடனே படித்து, அதில் இருக்கிற தொழில் வாய்ப்புகளில் நமக்கு எது உதவும் என்று பார்ப்பேன். அப்படித்தான் ரீ-சார்ஜ் கூப்பன்கள் பற்றிய செய்தியைப் படித்தேன். ‘அதில் என்ன பெரிய வருமானம் இருக்கிறது?’ என்று வெகுநாட்களாக அலட்சியமாக இருந்த எனக்கு, நாணயம் படித்ததும், ‘அட... இதில் இத்தனை விஷயம் இருக்கிறதா?’ என்ற உண்மை புரிந்தது. உடனே, வாங்கி வைத்தேன். அடுத்து, காயின் பாக்ஸ் பற்றிய செய்தி... அதையும் செயல்படுத்தினேன். இப்போது, அதில் கிட்டத்தட்ட 750 ரூபாய் வரை மாதாமாதம் கூடுதல் வருமானமாக வந்து கொண்டிருக்கிறது’’ - நன்றிப் பெருக்குடன் சொன்ன இர்ஃபான்,

‘‘என் நண்பர் ஒருவர், ‘என்ன பைக் வாங்கலாம்?’ என்ற குழப்பத்தில் இருந்தார். நாணயம் விகடனில் சிடி 100 பைக் பற்றிய ‘டெஸ்ட் டிரைவ்’ செய்தியைக் காட்டி, அதன் தரம் பற்றி சொன்னேன். குழப்பம் தீர்ந்து வண்டி வாங்கிவிட்டார் நண்பர்’’ என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism