ஆசிரியர் பக்கம்

ஹலோ வாசகர்களே,

ரி  லையன்ஸ் நிறுவனத்தினரையும் கோயம்பேடு வணிகர் சங்கப் பிரதிநிதிகளையும் சந்திக்க வைத்தது பற்றி பரவலாக பல திசைகளில் இருந்தும் பாராட்டியிருக்கிறீர்கள். அவர்களுடைய கருத்து வேறுபாடுகள் வெறும் பரபரப்புச் செய்தியாக மாற்றப்படும் நிலையில், இருதரப்பினரின் பிரச்னைகளையும் மனம்விட்டுப் பேசிக்கொள்ள மேடை அமைத்துக் கொடுத்தது நல்ல முன்னுதாரணம் என்று பாராட்டியிருக்கிறீர்கள்.

இந்த இதழில் வீட்டுக் கடன் வட்டி விகிதம் எகிறிப் போயிருப்பதைப் பற்றியும் அதற்கு வாடிக்கையாளர்கள் என்ன தீர்வைத் தேடலாம் என்பது பற்றியும் கட்டுரையாக்கி இருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் என்ன முடிவு எடுத்தால் சரியாக இருக்கும் என்று தெளிவுபெறுவதற்கு அந்தக் கட்டுரை நல்ல தூண்டுதலாக இருக்கும்.

பங்குச் சந்தையின் அடிப்படையைப் பற்றியும், அதில் உள்ள நெளிவு - சுளிவுகளைப் பற்றியும் எல்லாக் கோணங்களிலும் அலசி ஆராய்ந்த நாகப்பன்- புகழேந்தியின், ‘சிகரம் தொடுவோம்’ கட்டுரைத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து, புதிய தொடர் ஆரம்பமாகி இருக்கிறது.

இது வாசகர்களை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும் பங்குச் சந்தை குறித்த டெக்னிக்கல் அனாலிசிஸ் தொடர்! பங்குகளை நீங்கள் வாங்குவதற்கு இந்த அலசல் நிச்சயம் உதவியாக இருக்கும். அதோடு, கையில் இருக்கும் பங்குகளை விற்றுவிடலாமா அல்லது இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வைத்திருக்கலாமா என்பது பற்றிய முடிவு எடுக்கவும் உதவிகரமாக இருக்கும்.

சென்னை ரியல் எஸ்டேட்டின் ஏறுமுகத்தில் சிறு சரிவு ஏற்பட்டிருக்கிறது என்று கசிந்த தகவலை அடுத்து, அதன் பல்ஸ் பிடித்துப் பார்க்கும் விதமாக ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்களிடம் பேசித் தொகுத்திருக்கிறோம். அவர்கள் சொல்வதைப் படித்தால் லேட்டஸ்ட் நிலவரம் குறித்த தெளிவு பிறக்கும்.

பெண்கள் வேலைக்குச் செல்வதில் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. அதற்கான தீர்வு தேடும் முயற்சிகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்தப் பிரச்னையை ஓரளவுக்குச் சமாளித்து விடலாம் என்று சொல்லும் விதமாக ஒரு மாற்றம் உருவாகி இருக்கிறது. அதையும் ஒரு கட்டுரை தொடுகிறது. என்னவென்று தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதில் யாருக்குமே தயக்கம் இருப்பதில்லை. ஆனால், அதற்கான பிரீமியத்தை ஒழுங்காகச் செலுத்துவதில்தான் பல சிரமங்கள். செலுத்தாமல் விட்ட பாலிசிகள் காலாவதியாகிவிட்டால் என்ன செய்து அதைப் புதுப்பிக்கலாம் என்பதைப் பற்றிய கட்டுரை உள்ளே இருக்கிறது.

படியுங்கள்... பணத்தைப் பெருக்குங்கள்.