Published:Updated:

ஊழல் நரகாசுரன் ஒழியட்டும்!

ஊழல் நரகாசுரன் ஒழியட்டும்!

ஊழல் நரகாசுரன் ஒழியட்டும்!

ஊழல் நரகாசுரன் ஒழியட்டும்!

Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

##~##

கடந்த வாரம் நடந்த நிகழ்வுகளில் இரண்டு விஷயங்கள் அதிமுக்கியமானவை. முதலாவது விஷயம், சர்ச்சைகளின் நாயகியாக விளங்கும் நீரா ராடியா தொடர்பானது. ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துக்கு மத்திய அரசாங்கம் கூடுதலாக நிலக்கரியைத் தர ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி அளித்தது. ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துக்கு இந்த அனுமதியை எப்படி அளிக்கலாம்? இரும்பு தயாரிக்கும் தொழிலை செய்துவரும் டாடா நிறுவனத்துக்கு அல்லவா இந்த அனுமதியைத் தந்திருக்க வேண்டும்? என்று மனம் கொதித்து பல முக்கியஸ்தர்களிடம் போனில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊழல் நரகாசுரன் ஒழியட்டும்!

பேசிய பேச்சு வெளியானது.

டாடா நிறுவனம் தயாரிக்கும் பஸ்களை வாங்கும்படி தி.மு.க. தலைமையிடம் சிபாரிசு செய்ய நீரா ராடியாவிடம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரவிகாந்த் டெலிபோனில் மன்றாடிய பேச்சும் வெளியானது, மேற்சொன்ன முக்கிய நிகழ்வின் துணை நிகழ்வாகவே கருதலாம்.

இரண்டாவது விஷயம், அரசின் சொத்தான நிலக்கரி விலையையோ, அதை யாருக்கு விற்க வேண்டும் என்கிற முடிவையோ அரசு அதிகாரிகள் செய்வதில்லை. மத்திய அரசின் சில அமைச்சர்கள், நிலக்கரி மாஃபியாக்களுடன் சேர்ந்துதான் தீர்மானிக்கிறார்கள் என்பதை நிலக்கரித் துறையின் முன்னாள் செயலாளராக இருந்த பி.சி.பரக், எட்டு ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு எழுதியிருந்த கடிதம் பல பத்திரிகைகளில் வெளியானது.

ஊழல் நரகாசுரன் ஒழியட்டும்!

இந்த விஷயங்களை எல்லாம் பார்க்கிறபோது, இன்றைக்கு நிர்வாக இயந்திரத்தை நடத்திச் செல்லும் அரசு அதிகாரிகளைவிடவும், அமைச்சர்களைவிடவும் சில தனிப்பட்ட நபர்கள் படுபவர்ஃபுல்லாக மாறி, அரசின் முக்கிய முடிவுகளை செய்யும் சூத்திரதாரிகளாக அவதாரம் எடுத்துவிடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.  

அரசாங்கத்தின் வளங்களைப் பயன்படுத்த யார் யாருக்கு அனுமதி தரவேண்டும் என்கிற விஷயத்தில், அமைச்சர்கள் தங்கள் சுயநலத்துக்கு ஏற்ப முடிவு செய்து வருவதைப் பார்க்கும்போது, கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் இந்த ஆட்சியின் அனைத்து நாளங்களிலும் ஊழல் புரையோடிப் போயிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

இது தீபாவளி நேரம். நரகாசுரனை தீர்த்துக்கட்டிய இத்திருநாளில், ஊழல் என்னும் நரகாசுரனையும் ஒழித்துக்கட்ட மக்களாகிய நாம்தான் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். வாசகர்கள் அனைவருக்கும் நாணயம் விகடனின் தீபாவளி

வாழ்த்துக்கள்!
 - ஆசிரியர்