சமீபத்தில் தோழி வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். உட்கார இடம் இல்லாத அளவுக்கு... சுற்றமும், நட்பும் அந்த அரங்கத்தை நிறைத்திருந்தன. ''கிட்டத்தட்ட, பத்திரிகை வெச்ச எல்லாருமே வந்துட்டாங்க. வராத சிலரும், 'வீட்டுக்கே வந்து பொண்ணு - மாப்பிள்ளையை வாழ்த்துறதா போன்ல சொல்லியிருக்காங்க'' என்றபோது தோழியின் குரலில் அத்தனை பெருமை!

இதற்குச் சற்றும் குறையாத பெருமித உணர்வை, அக்டோபர் 19, 20 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற 'ஜாலி டே’ நிகழ்ச்சியின்போது எங்களிடம் பெருக வைத்துவிட்டீர்கள் தோழிகளே!

இதுபோன்ற நிகழ்வுகளின் தத்துவமே... 'மகிழ்வித்து மகிழ்!’ என்பதுதானே! இதற்கு, பரஸ்பரம் அன்றைய தினம் நாம் செயல் வடிவில் அர்த்தம் கொடுத்துக் கொண்டோம் என்றே சொல்லத் தோன்றுகிறது!

'எப்படியிருக்கீங்க... 16-ம் ஆண்டு சிறப்பிதழ்ல நீங்க எழுதியிருந்த கட்டுரை சூப்பர்... புதுசா இப்ப என்ன ஆர்டிகிள் செய்துட்டு இருக்கீங்க...' என்று 'அவள் விகடன்' குழுவிலிருக்கும் ஒவ்வொருவரையும் தேடிப்பிடித்து விசாரித்தது; 'வீட்டுல எல்லாரும் சௌக்கியமா..?' என்று குடும்ப நலனைக் கேட்டது; 'என்ன இவ்வளவு ஒல்லியா இருக்கீங்க..?' என்று உரிமையோடு கரிசனம் காட்டியது; ஜாலி, கேலி கேள்விகளால் கலாய்த்தது... என ஆயிரத்துக்கும் மேலே வந்து குவிந்துவிட்ட உங்களின் அன்பு வலைக்குள் சிக்கி, திக்குமுக்காடித்தான் போனோம்.

வாய்விட்டு சிரிக்கும்போதும், அனுபவித்து பாடும்போதும், மனசுக்கு பிடித்தவர்களை நீண்ட நாளைக்குப் பிறகு சந்திக்கும்போதும்... நம்மையே மறந்துவிடுவோம். ஜாலி டே அன்று இதுதானே நடந்தது நம் ஒவ்வொருவருக்கும்! 'நான் அரசு ஊழியர்’, 'நான் பன்னாட்டு நிறுவனத்தில் மேனேஜர்’, 'குடும்பத் தலைவி', 'பேரன் - பேத்திகள் எடுத்துவிட்ட பெரிய மனுஷி...’ இதையெல்லாம், எல்லோருமே மறந்துதானே போனோம்!

சென்னை வாசகி சசிகலா, மேடை ஏறி, 'இன்று என் திருமண நாள்!’ என்றபோது, அடுத்தநொடியே மூத்த தோழி ஒருவர் ஓடோடி வந்து கையிலிருந்த மணிமாலையை பரிசாக அளித்தது... குழந்தையுடன் மேடையேறிய ஒரு விஜயலட்சுமி, 'என் பேத்தி வர்ஷினிக்கு இன்று பிறந்தநாள்... அதை அவள் தோழிகளுடன் கொண்டாட வந்தேன்’ என்று பெரிய கேக்குடன் பேத்தியுடன் மேடையேறியதும், அரங்கம் அதிர கரகோஷங்களுடன் வாழ்த்தொலிகளை எழுப்பியது... இதையெல்லாம் பார்த்தபோது எங்களின் மனதில் ஏற்பட்ட பூரிப்புக்கு இணையே இல்லை!

அத்தகைய ஆனந்தத்தை மீண்டுமொருமுறை அடையக் காத்திருக்கிறோம்.

அடுத்த ஜாலி டே நவம்பர் 24 சேலத்தில்! சந்திப்போம் தோழிகளே!

உரிமையுடன்

ஆசிரியர்