ஹலோ வாசகர்களே..!

வெகு விரைவில் டெல்லி உள்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நடைபெற இருப்பதால் கிரித் பரிக் கமிட்டி பரிந்துரைகளை இப்போதைக்கு ஓரம்கட்டிவிட்டு, டீசல் விலையை மாதத்துக்கு ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் வீதமும், சமையல் காஸ் விலையை ஒரு மாதத்துக்கு 10 ரூபாய் வீதமும் உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.

அரசின் வருமானத்தை உயர்த்தவும், இழப்பைச் சரிக்கட்டவும் வலியவர்களை விட்டுவிட்டு, திரும்பத்திரும்ப சாதாரண, எளிய மக்களை இந்த அரசாங்கம் வறுத்தெடுப்பது ஏன் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் வருமான வரியை சரியாகச் செலுத்தாத பெரும் பணக்காரர்கள் பல ஆயிரம்பேர். இவர்களிடமிருந்து வசூலாகாத வரி பாக்கியே லட்சம் கோடி ரூபாய்க்குமேல் இருக்கும். புனேவைச் சேர்ந்த ஹஸன் அலி என்பவரிடமிருந்து மட்டும் 60,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி பாக்கி இருக்கிறது. இந்த வரியை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கத் திராணி இல்லாத இந்த அரசாங்கம், ஏழைகளின் தலையில் இன்னும் சுமையை ஏற்ற மட்டும் எப்படித் துணிகிறது?

அரசாங்கத்தின் சட்டாம்பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டியதைக் கொடுத்துவிட்டால், நிலக்கரியாக இருந்தாலும் சரி, தொலைபேசி அலைவரிசையாக இருந்தாலும் சரி, கிரானைட் கல்லாக இருந்தாலும் சரி, கடற்கரை மணலாக இருந்தாலும் சரி, எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக்கொண்டு செல்லலாம் என்பதுதான் இன்றைக்கு அறிவிக்கப்படாத நடைமுறையாக இருக்கிறது.

இதை எல்லாம் தடுத்தால் போதுமே, மானியச் சுமை என்கிற பேச்சுக்குப் பதிலாக

எல்லோருக்கும் இலவசமாகவே சமையல் காஸை இந்த அரசாங்கத்தால் கொடுக்க முடியுமே! ஆனால், இந்தக் கொள்ளையைத் தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க நினைக்காத இந்த அரசாங்கம், எளிய மக்களை மட்டும் இன்னும் துன்புறுத்திப் பார்க்கமட்டும் எப்படி நினைக்கிறது?

தேர்தல் என்று வரும்போது மட்டும் மக்களின் சேவகர்கள்போல வேஷம் காட்டிவிட்டு, ஜெயித்தபின் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிடலாம் என்கிற கபடநாடகத்தை இந்த அரசாங்கம் இன்னும் எத்தனை நாளைக்கு நடத்தப் போகிறது?

- ஆசிரியர்.