Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

Published:Updated:

வேலை வாய்ப்பைப் பெருக்குங்கள்!

##~##
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டின் மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது வேலையில்லாத் திண்டாட்டம். தொண்ணூறுகளுக்குப் பிறகு உற்பத்தித் துறையானது நல்ல வளர்ச்சி கண்டதன் விளைவாக வேலை வாய்ப்பு அதிகரித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை இப்போது மீண்டும் வந்துவிடுமோ என அச்சம்கொள்ள வைக்கிறது சமீபத்தில் வெளியான சில புள்ளிவிவரங்கள். நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்க்கனைசேஷன் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2010, 2011 ஆகிய இரு ஆண்டுகளில் வேலை வாய்ப்பின்மை 10.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த நூற்றாண்டின் முதல் ஐந்து வருடங்களில் 1.20 கோடி வேலைகள் உருவான உற்பத்தி துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் வேலை குறைந்துள்ளது.

அதேசமயம், 12-வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையின்படி, 2012 முதல் 17 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 6.30 கோடி பேர் புதிய வேலை தேடி  வரப் போகின்றனர். இவர்களில் கணிசமான பகுதியினர் இளம்வயதினர். இன்னும் 15 ஆண்டு காலத்தில் 18.3 கோடி பேருக்கு வேலை தேவை என்பது இன்னொரு அதிர்ச்சியான புள்ளிவிவரம்.

ஹலோ வாசகர்களே..!

இந்நிலைமையைச் சமாளிக்க வேண்டுமெனில், உற்பத்தித் துறையை இனியாவது போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை. இனியும் சேவைத் துறையை மட்டுமே நம்பாமல் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், அங்கிருக்கும் வளங்களை

ஹலோ வாசகர்களே..!

அடிப்படையாகவைத்து புதிய தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும். நமக்குத் தேவையான துடைப்பத்தைகூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யாமல், நம் நாட்டிலேயே கற்பூரம் முதல் கார் வரை அத்தனைப் பொருட்களையும் தயாரிக்க வேண்டும். உற்பத்தித் துறைக்கு தேவையான சாலை வசதி, மின் வசதி, மனித வளம், நிதி போன்ற அனைத்தும் எளிதில் கிடைப்பதற்கு தேவையான  எல்லா நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இந்த கோணத்தில் அரசாங்கம் சிந்தித்து, செயல்பட மறுத்தால், வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களால் நாடு சின்னாபின்னமாகும் என்பதில் சந்தேகமே இல்லை!

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism