Published:Updated:

சவாலைச் சந்திப்பாரா மோடி?

சவாலைச் சந்திப்பாரா மோடி?

சவாலைச் சந்திப்பாரா மோடி?

சவாலைச் சந்திப்பாரா மோடி?

Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

##~##

 இந்தியாவிலிருந்து 2011-ம் ஆண்டில் மட்டும் 4 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணமும், 2002 முதல் 2011 வரையிலான பத்து ஆண்டுகளில் 15.7 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணமும் வெளிநாடுகளுக்கு சத்தமில்லாமல் சென்றிருக்கிறது என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது குளோபல் ஃபைனான்ஷியல் இன்டெக்ரிட்டி என்கிற அமைப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகின் பிறநாடுகளிலிருந்து கண்டம்விட்டு கண்டம் தாவிய கறுப்புப் பணத்தின் அளவோடு ஒப்பிட்டால் இது குறைவு என்றாலும், கறுப்புப் பணத்தை உருவாக்குவதில் நம் நாடு வேறு எந்த

சவாலைச் சந்திப்பாரா மோடி?

நாட்டுக்கும் சளைத்ததில்லை என்பது வெட்டவெளிச்சமாகிறது.  

ஏற்றுமதி, இறக்குமதி விலைகளை குறைவாகவும் அதிகமாகவும் காட்டி பணத்தை வெளிநாட்டிலேயே வைத்திருப்பது, ஹவாலா பணப்பரிமாற்றம், வரி கட்டாமல் அரசாங்கத்தை ஏய்த்து சம்பாதிக்கும் பணம் என கறுப்புப் பணத்தின் ரிஷிமூலம் பலவாறாக இருந்தாலும், ஊழலும், லஞ்சமும்தான் அதற்கு முக்கிய காரணம் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் ஊழல் என்கிற புற்றுநோய், ஆட்சி அதிகாரத்தின் சகல பாகங்களிலும் புரையோடிருப்பதைத் தெளிவாக பார்க்க முடிகிறது. கடந்த வருடங்களில் நடந்த மிகப் பெரிய ஊழல்களை மட்டும் கணக்கிலெடுத்தாலே, அதில் பல லட்சம் கோடி ரூபாய் பணம் விளையாடி இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

சவாலைச் சந்திப்பாரா மோடி?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை 100 நாட்களில் இந்தியாவுக்கு கொண்டுவருவோம் என்று 2008 நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி தந்தவர் பிரதமர் மன்மோகன் சிங். ஆனால், 1,000 நாட்கள் கடந்துவிட்டபின்பும் அதுதொடர்பாக எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்காரணமாக பொருளாதாரம் சீர்குலைந்து மக்களை வாட்டி வதைத்ததால், நான்கு மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் மக்கள்.

காங்கிரஸின் வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை என்பது உறுதியாகிவிட்டதால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற கட்சிகள், கறுப்பு பணத்தை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்களை அறிவிக்க வேண்டும். பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி இதற்கு செவி சாய்ப்பாரா?

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism