Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
##~##

'மக்களுக்குத் தேவையான அரிசி,  பருப்பு,  காய்கறி,  எண்ணெய்  போன்ற  அத்தியாவசிய  பொருட்களின் விலைகள் எல்லாம் தாறுமாறாக ஏறுகின்றன. 

ஆனால்...  டி.வி, வாஷிங்மெஷின்,  ஏ.ஸி. போன்றவை  தள்ளுபடி விலையிலும்... ஜீரோ பர்சென்ட் வட்டியிலும் கிடைக்கின்றனவே?’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஒரு வாசகி, கவலை ததும்ப இப்படி நமக்கு எழுதி அனுப்பியிருந்தார்.

எந்தக் கேள்வியைக் கேட்டாலும் தனக்கே உரிய ஸ்டைலில் எளிமை, செறிவு ப்ளஸ் சுவாரஸ்யம் கலந்து சொல்வதையே தன் பாணியாக வைத்திருக்கும் 'பொருளாதார நிபுணர்' நாகப்பனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, வாசகியின் இந்தக் கேள்வியைச் சொன்னேன்.

''வீட்டு உபயோகப் பொருட்கள் தள்ளுபடி மற்றும் ஜீரோ பர்சென்ட் விலையில் கிடைப்பது பற்றியெல்லாம் கவலைப்படுவதைவிட, தற்போதைய மோசமான பொருளாதார சூழலில், செலவுகளை எப்படி கட்டுக்குள் வைத்துக் கொள்வது  என்று யோசிப்பதுதான் மிகமுக்கியம். நம் அம்மா, பாட்டி, கொள்ளுபாட்டி எப்படி எல்லாம் சிக்கனமாக இருந்தார்கள் என்பதை சற்றே நினைத்துப் பாருங்கள்...   ஆயிரம் பேருக்கும் அருமையான யோசனைகளை நீங்களே சொல்ல முடியும்.

நமக்குள்ளே...

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, 'டிலேய்ட் கிராட்டிஃபிகேஷன்' (Delayed gratification) என்ற வார்த்தைகள் உலக அளவில் மிகவும் பிரசித்தம். இதற்காக நேரடி சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. குழந்தைகளைக் கூட்டமாக அழைத்து, ஒவ்வொரு சாக்லேட்டாக தரப்பட்டு, 'இதை அரை மணி நேரம் அப்படியே வைத் திருந்தால், கைநிறைய சாக்லேட் தருவோம்' என்று சொன்னார்கள். ஆனால், அடுத்த 5 நிமிடத்தில் சிலர், 15 நிமிடத்தில் பலர் என்று 80 சதவிகித குழந்தைகள் சாப்பிட்டு முடித்திருந்தன. 20 சதவிகித குழந்தைகளே கை நிறைய சாக்லேட்டை பெற்றன!

எதுவுமே உடனடியாக கைகூடிவிட வேண்டும் என்றே பெரும்பாலானோர் எதிர்பார்க்கிறார்கள். எதற்காகவும் காத்திருக்க யாரும் தயாராக இல்லை'' என்று அழகாகப் புரிய வைத்த நாகப்பன், நிறைவாக சொன்ன டிப்ஸ்... எவர்க்ரீன் டிப்ஸ்!

''அத்தியாவசிய பொருட்கள், கல்வி, மருத்துவத் தேவைகள் என தலைபோகிற முக்கியமான செலவுகளைத் தவிர, வேறு எந்த மாதிரியான கணிசமான  செலவாக இருந்தாலும்... ஒரு நாளோ, ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ தள்ளிப் போடுங்கள். பல சமயங்களில் இப்படிப்பட்ட செலவு... அர்த்தமில்லாதது என்பது நமக்கே புலப்பட்டுவிடும். அல்லது அந்தச் செலவுக்கு அவசியமில்லாமலேகூட போகலாம்.''

இதையெல்லாம், நாம் பலதடவை நேரடியாக அனுபவித்து உணர்ந்திருப்பவர்கள் தானே தோழிகளே!

உரிமையுடன்

நமக்குள்ளே...

 ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism