Published:Updated:

வரவுக்கு மீறி செலவு செய்த காங்கிரஸ்!

வரவுக்கு மீறி செலவு செய்த காங்கிரஸ்!

##~##

ருமானத்துக்கு மீறி இஷ்டப்படி செலவு செய்தால், கடனில் சிக்கி மீளமுடியாது என்பது சாதாரண மக்களுக்கே தெரிந்திருக்கும்போது, பொருளாதார வல்லுநர்களை பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் கொண்டுள்ள மத்திய அரசுக்கு தெரியாமல் இருக்குமா?

ஆனால், கன்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் அக்கவுன்ட்ஸ் அலுவலகத்தின் டிசம்பர் 31 அறிக்கையின்படி, 2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாதங்களில் மத்திய அரசு வருமானமாக சம்பாதித்திருக்கும் தொகை 5,11,638 கோடி ரூபாய். இதே காலகட்டத்தில் மத்திய அரசாங்கம் செலவு செய்திருக்கும் தொகை 10,12,195 கோடி ரூபாய். அதாவது, வரவைவிட 99.6 சதவிகிதம் அதிகமாக செலவு செய்திருக்கிறது நம் மத்திய அரசாங்கம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதில் அதிர்ச்சிகரமான விஷயம், இந்த நிதியாண்டில் (2013-14) மொத்தம் 16,65,297 கோடி ரூபாய் செலவு செய்ய மத்திய அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இதில் 10,12,195 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை செலவு செய்திருக்கிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக இத்தனை லட்சம் கோடி ரூபாய்களை செலவு செய்து, கஜானாவையே காலி செய்துவிட்ட நம் மத்திய அரசாங்கம், மீதமிருக்கும் ஐந்து லட்சம் கோடிக்கும் அதிகமான செலவைச் செய்ய பணத்துக்கு எங்கே போகும் என்று தெரியவில்லை.

வரவுக்கு மீறி செலவு செய்த காங்கிரஸ்!
வரவுக்கு மீறி செலவு செய்த காங்கிரஸ்!

டிசம்பர் தொடங்கி, எதிர்வரும் மார்ச் வரை மத்திய அரசாங்கம் எந்த பெரிய செலவையும் செய்யாமல் இருந்தால் மட்டுமே நிதிப் பற்றாக்குறை கட்டுக்கு மீறிச் செல்லாமல் காக்க முடியும். தவிர, எண்ணெய் நிறுவனங்களுக்கும் உரத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தரவேண்டிய மானியத்தைத் தராமல் இழுத்தடித்தால் மட்டுமே நிதிப் பற்றாக்குறை உயராமல் தடுக்க முடியும்.

இதில் வேதனையான விஷயம், இத்தனை லட்சம் கோடி ரூபாய் செலவழித்த பின்பும் நம் பொருளாதாரம் எந்த பெரிய வளர்ச்சியும் காணவில்லை. வேலைவாய்ப்பு பெருகவில்லை. உற்பத்தி அதிகரிக்கவில்லை. உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்வேகம் பெறவில்லை. எந்த வகையிலும் பயன் தராத இந்தச் செலவுகள் எல்லாம் வீண்செலவுகள்தானே! இது அடுத்துவரும் அரசாங்கத்துக்கு பெரும் சுமையாகத்தானே இருக்கும்? ஒருவேளை காங்கிரஸ் கட்சியே அடுத்து ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பிரச்னையை சமாளிப்பது கடினம்தானே!

நாட்டின் வளர்ச்சியைவிட இலவசங்களை அளிப்பதன் மூலம் தொடர்ந்து ஆட்சியில் இருக்க நினைக்கும் கட்சிகளின் சிந்தனை மாறினால் ஒழிய, நிதிப் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வே இல்லை!

- ஆசிரியர்.