பள்ளி செல்லும் பிள்ளைகள் இருக்கும் வீடுகளுக்கேயுரிய காலை நேர பரபரப்புக்கு... தோழியின் வீட்டில் துளியும் குறைவிருக்காது.

''ஒரு நாளைப் போல லேட்டா எழுந்திருக்கிறே... என்னிக்குத்தான் சீக்கிரமா ஸ்கூல் கிளம்புவே. வேகமா போறோம்ங்கற பேர்ல ரெண்டு பேரும் வண்டியிலிருந்து ரோட்டுல விழுந்தா... என்னாகறது?''

- இப்படி ஏதாவது அனத்தியபடியேதான் சடை பின்னுவது, லஞ்ச் பாக்ஸ் கட்டுவது, ஸ்கூட்டியில் அழைத்துச் செல்வது அத்தனையும் நடக்கும்!

நிதானமான ஒரு ஞாயிற்றுக்கிழமை, கை நிறைய பைகளுடன் மார்க்கெட்டில் இருந்து கணவனுடன் வெளிப்பட்ட அந்தத் தோழியிடம் சிறிது உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

''பொங்கல் வந்துடுச்சு... அடுத்தது, மார்ச் மாத டென்ஷன்தான். எனக்கென்னவோ பயமாவே இருக்கு'' என்றார் தோழி.

''குடும்பம்னு இருந்தா... செலவுகள் இருக்கத்தான் செய்யும். இருக்கறத வெச்சு, சிறப்பா வாழறதுலதானே இருக்கு கொண்டாட்டம்'' என்று நான் ஆறுதல் சொல்ல... அவருடைய முகபாவனையில் ஒரு மாற்றம்.

''நான் சொல்ல வந்ததே வேற. பிளஸ் 2 படிக்கும் மகளோட பரீட்சைக்கு இன்னும் ரெண்டு மாசம்கூட முழுசா இல்ல...''

இப்போதும் முந்திக் கொண்ட நான்...

''மார்க் குறைஞ்சுடும்... காலேஜுல ஸீட் கிடைக்காது... கேபிடேஷன் ஃபீஸ் கொடுக்கவேண்டி இருக்கும் இப்படியெல்லாம் நீயே முடிச்சுகள் போட்டு, பொண்ணோட எக்ஸாம் ஃபீவரை இன்னும் கூட்டிவிடாதே. நம்பிக்கையூட்டற மாதிரி நடந்துக்கோ'' என்றேன்.

''அட... என் பிரச்னையே வேறப்பா'' என்று மீண்டும் முகம்மாறியவர்,

''ஸ்கூல், டியூஷன்னு இத்தனை நாளா... கால்ல சக்கரத்தைக் கட்டிட்டு அவ கூடவே ஓடிட்டிருந்தேன். பரீட்சை முடிஞ்சு, ஏதாவது வெளியூர் காலேஜுக்கு அவ படிக்கப் போயிட்டா... என் வாழ்க்கையே வெறுமையா ஆனது மாதிரியில்ல இருக்கும். டியூஷன்ல விட்டுட்டு, பக்கத்து பூங்காவுல வாக்கிங்; மத்த அம்மாக்களோட அரட்டை; பக்கத்து கோயிலுக்கு ஒரு நடைனு இருப்பேன். டயாபடீஸ், கட்டுப்பாட்டுல இருக்கும். 'இன்னிக்கு பொழுதை உருப்படியா கழிச்சோம்'ங்கிற திருப்தியிலயும்... களைப்பிலும் நிம்மதியான தூக்கமும் வரும். ஆனா, இனி எந்த வேலையும் இருக்காதே!''

- சொல்லி முடித்தபோது தோழியின் கண்களில் நீர் முட்டியது. எனக்குள் கேள்வி முட்டியது...

'தோழி, இத்தனை நாட்களாக தன் மகளுக்கு உதவி செய்து வந்தாரா... அல்லது மகள், தன் அம்மாவுக்கு உதவி செய்து வந்தாளா?'

வாழ்க்கை முன்வைக்கும் கேள்விகளுக்குத்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்!

உரிமையுடன்

ஆசிரியர்