Published:Updated:

பிரபலமாக்குகிறார்களா, ஒழித்துக்கட்டுகிறார்களா?

பிரபலமாக்குகிறார்களா, ஒழித்துக்கட்டுகிறார்களா?

##~##

தேசிய ஓய்வூதியத் திட்டம் ஐந்தாண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டபோது, எல்லோரும் பாராட்டவே செய்தார்கள். இனி அரசு ஊழியர்கள்போல, தனியார் மற்றும் அமைப்பு சாரா நிறுவன ஊழியர்களுக்கும் ஓய்வுக் காலத்தில் பென்ஷன் கிடைக்கும் என்பதே இந்தப் பாராட்டுதலுக்குக் காரணம்.

ஆனால், இந்தத் திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியதோடு சரி, அதை எல்லாத் தனியார் ஊழியர்களுக்கும் சென்றடைவதற்கு உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இப்போது, இந்தத் திட்டத்தைப் பிரபலப்படுத்துகிறோம் என்று சொல்லி, திட்டம் கொண்டுவந்ததற்கான அடிப்படை நோக்கத்தையே சிதைக்கப் பார்க்கிறது பென்ஷன் ஃபண்டு அத்தாரிட்டி. இந்தத் திட்டத்தில் சேர்ந்து 10 ஆண்டுகள் கழித்து 25% வரை எடுத்துக்கொள்ளலாம் எனப் புதிய நடைமுறையைக் கொண்டுவருவதன் மூலம் ஓய்வுக் காலத்துக்கான சேமிப்பைக் கரைக்கப் பார்க்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் அதிகபட்சம் 25 சதவிகித சேமிப்பை மூன்று தவணைகளில் சில முக்கியக் காரணங்களுக்காக எடுத்துக்கொள்ளலாம் என்று இப்போது சொல்வதன் மூலம் இந்தத் திட்டத்தை எந்த வகையிலும் பிரபலமாக்க முடியாது. அதற்குப் பதிலாக, இதுவும் ஒரு வங்கி வைப்பு நிதித் திட்டமே என்கிற அபிப்ராயத்தை மக்களிடம் உருவாக்கி, ஒதுங்கிச் செல்லவே செய்யும்.  

பிரபலமாக்குகிறார்களா, ஒழித்துக்கட்டுகிறார்களா?
பிரபலமாக்குகிறார்களா, ஒழித்துக்கட்டுகிறார்களா?

ஓய்வுக் காலச் சேமிப்பு என்பது கடைசிக் காலத்தில் நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுப்பது. அந்தப் பணத்தை எந்த வகையிலும் வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்பது நிதி ஒழுங்கு கொண்டவர்களுக்கு நன்கு தெரியும். இன்றைக்குப் பசிக்கிறது என்பதற்காக விதைநெல்லை எடுத்து உணவாக்கி சாப்பிடுகிறவர்கள், நாளைக்கு விதைப்பதற்கான விதையைத் தேடி எங்கே போவார்கள்? இன்றைக்கு ஏதோ ஒரு முக்கியச் செலவு என்று நினைத்து, ஓய்வுக் காலச் சேமிப்பை எடுத்துவிட்டால், பிற்பாடு எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?

இந்தத் திட்டத்திலிருந்து பணமே எடுக்கக் கூடாது எனில், முக்கியச் செலவுக்கு எங்கே போவது என்பதும் நியாயமான கேள்விதான். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்கு ஆரம்பம் தொட்டு சேமித்தால், திடீர் செலவுகளைக் கண்டு அஞ்சி நடுங்கவேண்டிய அவசியம் இருக்காது அல்லவா? இந்தத் திட்டத்தைப் பிரபலப்படுத்துவதற்கான உண்மையான வழிகளை அரசாங்கம் தேடுவதை விட்டுவிட்டு, ஒழித்துக்கட்டும் முயற்சியில் இறங்க வேண்டாம்!

 - ஆசிரியர்.