Published:Updated:

அறிவிப்பு போதாது; கண்காணிப்பும் வேண்டும்!

அறிவிப்பு போதாது; கண்காணிப்பும் வேண்டும்!

ஹலோ வாசகர்களே..!

##~##

2005-க்கு முன்பு அச்சிடப்பட்ட, ஆண்டுக் குறிக்கப்படாத ரூபாய் நோட்டுகள் திரும்ப வாங்கப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி எடுத்திருக்கும் முடிவை நாம் நிச்சயமாக வரவேற்றாகவேண்டும். ஆர்பிஐ-ன் இந்த அறிவிப்பின் நோக்கம் கள்ள நோட்டுகளை ஒழிப்பதும், கறுப்புப் பணத்தைப் புழக்கத்தில் வராதபடிக்குத் தடுப்பதும் என்று தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை வெற்றி பெற்றால் மூன்றரை லட்சம் கோடிக்குமேல் ரூபாய் நோட்டுகள் முடக்கப்படும் என்று சொல்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மத்திய ரிசர்வ் வங்கி இப்படி ஓர் அறிவிப்பை மட்டும் வெளியிட்டுவிட்டு சும்மா இருந்துவிடக்கூடாது. காரணம், இந்த அறிவிப்பானது அடுத்தச் சில மாதங்களில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. பல நூறு கோடி ரூபாய் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், ஆண்டுக் குறிப்பிடப்படாத ரூபாய் வைத்திருக்கும்பட்சத்தில், அதை வங்கியில் மாற்றுவதற்குப் பதிலாக ரியல் எஸ்டேட், தங்கம் முதலியவற்றில் முதலீடு செய்யலாம். இதனால் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தின் விலை அடுத்தச் சில மாதங்களில் பெரிய அளவில் உயருவதற்கு வாய்ப்புண்டு. எனவே, 30 லட்சம் ரூபாய்க்குமேல் உள்ள சொத்து மாற்றங்களை மட்டுமே வருமான வரித் துறையினர் கவனிக்காமல், 10 லட்சம் ரூபாய்க்கும்மேல் உள்ள சொத்து மாற்றங்களையும் கவனிக்கவேண்டும்.

அறிவிப்பு போதாது; கண்காணிப்பும் வேண்டும்!

விரைவில் வரவிருக்கும் பொதுத் தேர்தலையட்டி இந்த அறிவிப்பு வந்துள்ளது சில சர்ச்சைகளைக்

அறிவிப்பு போதாது; கண்காணிப்பும் வேண்டும்!

கிளப்பியுள்ளது. ஒருசில அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளைத் தடுப்பதற்காக இப்படிச் செய்யப்பட்டு இருக்கலாம் எனச் சிலர் கருதினாலும், சுயஅதிகாரம் படைத்த ரிசர்வ் வங்கியின் நோக்கம் கள்ள நோட்டுகளையும் கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதுதான் என்று நம்பலாம். எனவே, அதிரடித் தேர்தல் செலவுகளைத் தேர்தல் கமிஷன் மூலம் கண்காணிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய ரிசர்வ் வங்கி எடுக்கவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இது ஒரு பொதுமன்னிப்புத் திட்டம் இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லி, ஆண்டுக் குறிக்கப்படாத ரூபாய் நோட்டுகளை அதிகளவில் மாற்ற வங்கிக்கு வருகிறவர்களை வருமான வரித் துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும். இந்த விஷயத்தில் இந்திய மக்களின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டு மத்திய ரிசர்வ் வங்கிச் செயல்படும் என்று நம்புவோமாக!

- ஆசிரியர்.