Published:Updated:

ஓட்டுக்குச் செலவாகும் மானியத் தொகை!

ஓட்டுக்குச் செலவாகும் மானியத் தொகை!

ஓட்டுக்குச் செலவாகும் மானியத் தொகை!

ஓட்டுக்குச் செலவாகும் மானியத் தொகை!

Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

##~##

மத்திய அரசு மானிய விலை காஸ் சிலிண்டர்களை வருடத்துக்கு ஒன்பதிலிருந்து 12-ஆக உயர்த்தியதைக் கண்டு, நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மூன்று சிலிண்டருக்கு சுமார் 2,160 ரூபாய் மிச்சமானால் யாருக்குதான் சந்தோஷமாக இருக்காது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மானியச் சுமை ஏறக்குறைய 5,000 கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது. காஸ் சிலிண்டர் மானியமாக மத்திய அரசாங்கம் ஏற்கெனவே 80,000 கோடி ரூபாய்ச் செலவழித்துவர, இப்போது அந்தச் சுமை அதிகரித்து, 85,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

ஓட்டுக்குச் செலவாகும் மானியத் தொகை!

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஆர்பிஐ-யின் கவர்னர் ரகுராம் ராஜன் கொஞ்சம் கடுமையாகவே விமர்சித்திருக்கிறார். 'தேவையற்ற மானியமாகவே’ அரசின் இந்த நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் கருத்து சொல்லி இருக்கிறார்.

ஆர்பிஐ கவர்னர் முன்வைக்கும் இந்த விமர்சனத்தில் இருக்கும் நியாயத்தைத் தட்டிக் கழித்துவிட முடியாது. கூடியவிரைவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக ஓட்டுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. ஊரார் வீட்டுப் பணத்தில் தனக்கு போஸ்டர் அடித்துக்கொள்ள அரசியல்வாதிகள் மானியத் தொகையைப் பயன்படுத்துவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசின் இந்த அறிவிப்பால் தங்களுக்குச் சில ஆயிரம் ரூபாய் மிச்சமாகும் என மக்கள் நினைத்தாலும், தாங்கள் வரியாகச் செலுத்தியப் பணத்திலிருந்துதான் இந்த மானியம் அளிக்கப்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. மக்களை மயக்கி ஓட்டு வாங்குவதற்காக மானியங்களைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமான செலவுகளைச் செய்வதற்கு மத்திய அரசாங்கம் ஏன் எந்தவொரு முயற்சியும் எடுப்பதில்லை?

ஓட்டுக்குச் செலவாகும் மானியத் தொகை!

மத்திய அரசாங்கம் எந்தெந்த விஷயங்களுக்கு முன்னுரிமை தந்து செலவு செய்யவேண்டும் என்கிற பட்டியலையும் ஆர்பிஐ கவர்னரே அளித்திருக்கிறார். உள்கட்டமைப்பு, மனிதவளம், வியாபார விதிமுறைகள், நிதி நிர்வாகம் ஆகியவற்றில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தினால், இந்தியாவின் ஜிடிபி 10% நிச்சயம் உயரும் என ஆர்பிஐ கவர்னர் சொல்வதை யாராலும் மறுக்க முடியாது.

இப்போதுள்ள அரசாங்கமும், தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கும் புதிய அரசாங்கமும் மக்களை மயக்கும் அரசியலைச் செய்யாமல், நீண்டகால நோக்கில் நாட்டின் வளர்ச்சிக்குப் பலமான அடித்தளம் அமைக்கும் வேலையில் ஈடுபட்டால்தான், இந்தியா வளர்ந்த நாடாக மாற முடியும்!

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism