Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
##~##

தோழிகளே... ஒரு கதை சொல்லலாம் என நினைக்கிறேன். நீங்களும்கூட இதை எங்காவது கேட்டிருக்கவோ... படித்திருக்கவோ கூடும்.

வகுப்பறையில் நுழைந்த அந்தப் பேராசிரியர், பெரிய கண்ணாடி ஜாடியை மேஜை மேல் வைத்து, கிரிக்கெட் பந்துகளால் நிரப்பிவிட்டு, ''ஜாடி நிரம்பி இருக்கிறதா?'’ என்று கேட்டார். ''ஆம்'’ என்றனர் மாணவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்ததாக, சிறுசிறு கோலிகளை அதிலேயே அவர் கொட்ட, பந்துகளின் நடுவில் கிடைத்த இடைவெளிகளில் அழகாக உட்கார்ந்தன கோலிகள்.

''இப்போது ஜாடி நிரம்பி இருக்கிறதா?'' என்றார். 'ஆம்' என்றே தலை அசைத்தனர்.

நிறைய மணலை அள்ளி, ஜாடியில் கொட்டிக் குலுக்கிய பேராசிரியர், மாணவர்களை ஏறிட்டார்.

''இப்போது மொத்தமாக நிறைந்துவிட்டது'’ என்றனர் ஒட்டுமொத்தக் குரலில்!

நமக்குள்ளே...

சிரித்துக்கொண்டே... இரண்டு கோப்பை தண்ணீரை எடுத்து ஜாடியில் ஊற்றினார் பேராசிரியர். அது மணலுடன் கலந்து நிறைந்தது. மாணவர்கள் சிரித்தனர்.

''இந்த ஜாடி, உங்கள் வாழ்க்கையைக் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். கிரிக்கெட் பந்துகள்... குடும்பம், குழந்தைகள், ஆரோக்கியம், நண்பர்கள் என வாழ்க்கையின் முக்கியமானவற்றைக் குறிப்பதாகக் கொள்ளுங்கள். எதை இழந்தாலும் இவையெல்லாம் உங்களுடன் இருப்பவை. வாழ்க்கை நிறைவாக இருக்க உதவுபவை. இந்த கோலிகள்... சொந்த வீடு, கார் என்று அடுத்த இடத்தைப் பிடிப்பவை என்று வைத்துக்கொள்ளுங்கள். மணல்... மற்ற சின்னச் சின்ன விஷயங்கள்!

சிறிது யோசியுங்கள்... முதலில் மணலைக் கொட்டியிருந்தால் என்னவாகியிருக்கும்? பந்துகளுக்கோ... கோலிகளுக்கோ இடமிருந்திருக்காது. நம் வாழ்க்கையும் அதேபோலத்தான். உங்களிடம் இருக்கும் நேரம் முழுவதையும் சின்னச் சின்ன விஷயங்களில் செலவிட்டால், பெரிய விஷயங்களுக்கு நேரம் இருக்காது. இப்படித் திட்டமிட்டு நேரத்தைச் செலவு செய்தால் கிடைக்கும் நமக்கான மகிழ்ச்சியான நேரம்தான்... தண்ணீர்!'’

- பேராசிரியரின் விளக்கம்... மாணவர்களுக்குள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது!

''ச்சே... ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் கிடச்சாலும் பத்தவே மாட்டேங்குதே... எத்தனை நேரம் வீட்டு வேலை செய்தாலும், அது வளர்ந்துட்டே இருக்கு... எப்படி முடிக்கப் போறேனோ... அக்கடானு உக்கார முடியுதா; ஒரு சினிமாவுக்குப் போக முடியுதா; பிக்னிக் போக முடியுதா?'’

- வீட்டுக்கு வீடு... ஆபீஸுக்கு ஆபீஸ்... வயலுக்கு வயல்... இப்படியே பேசிக்கொண்டிருக்கும் நமக்கு, இந்தக் கதை புதுவெளிச்சம் பாய்ச்சும் என்றே உணர்ந்தேன் நான்.

நீங்கள்..?

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism