Published:Updated:

இதுதான் நிதி அமைச்சரின் புத்திசாலித்தனமா?

இதுதான் நிதி அமைச்சரின் புத்திசாலித்தனமா?

இதுதான் நிதி அமைச்சரின் புத்திசாலித்தனமா?

இதுதான் நிதி அமைச்சரின் புத்திசாலித்தனமா?

Published:Updated:
##~##

ஹலோ வாசகர்களே..!

சற்றுத் தூரத்தில் தெரிகிறது மிகப் பெரிய சுவர். அந்தச் சுவர் மீது கார் மோதாமல் இருக்கவேண்டுமெனில், சுவரைப் பார்த்த மாத்திரத்திலேயே பிரேக்கை மிதித்து, வேகத்தைக் குறைக்க வேண்டும் என்பது சைக்கிள் ஓட்டத் தெரிந்த சாதாரண மனிதனுக்குக்கூடத் தெரியும். ஆனால், நமது நிதி அமைச்சருக்கு இந்தச் சாதாரண விஷயம் எப்படித்தான் தெரியாமல் போனதோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுதான் நிதி அமைச்சரின் புத்திசாலித்தனமா?

நிதிப் பற்றாக்குறையைக் கடந்த பட்ஜெட்டில் நிர்ணயித்தபடி 4.8 சத விகிதத்துக்குள் கொண்டுவந்துவிடவேண்டும் என்பதற்காக நிதி அமைச்சர் சிதம்பரம் இப்போது படாதபாடுபட்டு வருகிறார். இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பற்றாக்குறையில் 95.2 சதவிகிதம் (மொத்தமுள்ள 5,42,499 கோடி ரூபாயில் 5,16,390 கோடி  ரூபாய்) கடந்த டிசம்பரிலேயே செலவாகிவிட்டநிலையில், கடைசி மூன்று மாதத்துக்கான வருமானத்தைக் கூட்ட, எங்கெல்லாம் பணம் கிடைக்குமோ, அங்கிருந்தெல்லாம் கொண்டுவர முயற்சி செய்துவருகிறார் நிதி அமைச்சர்.

இதற்கு ஒரு சிறு உதாரணம், மத்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசாங்கத்துக்குத் தரவேண்டிய வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் தருவது வழக்கம். ஆகஸ்ட் மாதத்துக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்க, அப்போது தரவேண்டிய பணத்தை இப்போதே தந்துவிடும்படி கோரிக்கைக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்திருக்கிறதாம் நிதி அமைச்சகம்.

அதுமட்டுமல்ல, நிதிப் பற்றாக்குறையை 4.8 சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்துவதற்காக, இந்த வருடம்  தரவேண்டிய ரூ.1,45,000 கோடி மானியத் தொகையில் வெறும் ரூ.22,000 கோடியை மட்டும் இப்போது தந்துவிட்டு, மீதமுள்ள ரூ.1,23,000 கோடியை அடுத்த ஆண்டுக்குக் கொண்டுசெல்ல சமயோசிதமாக யோசித்து வருகிறார்.

இதுதான் நிதி அமைச்சரின் புத்திசாலித்தனமா?

இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும்போதே வரவு என்ன, செலவு என்ன என்பது நிதி அமைச்சருக்கு நன்கு தெரிந்திருக்கும். நிதிப் பற்றாக்குறையை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் நிறுத்தவேண்டுமெனில், அதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை நிதி ஆண்டின் தொடக்கம் முதலே செய்யாமல், பணமிருக்கிறபோது தாம்தூம் என்று செலவு செய்துவிட்டு, மாசக் கடைசியில் பணமில்லை என்பதால் பட்டினிக் கிடப்பதுபோல் செயல்படும் நிர்வாகம் என்ன நிதி நிர்வாகம்? அதிலும் இந்த மாதம் செய்யவேண்டிய செலவை அடுத்த மாதத்துக்குத் தள்ளுகிற அல்லது அடுத்தவன் தலையில் கட்டுகிற புத்திசாலித்தனம் என்ன புத்திசாலித்தனம்?

நிதி அமைச்சர் சிதம்பரம் என்ன செய்யப்போகிறார் என்பது இடைக்கால பட்ஜெட்டில் தெரிந்துவிடும்!

- ஆசிரியர்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism