ஹலோ வாசகர்களே..!

தலைக்குமேல் வெள்ளம்போகிற சமயத்தில், கவலைப்படாதீர்கள், உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என யாராவது சொன்னால், எரிச்சல்தானே வரும்? அதுமாதிரி எரிச்சலடைய வைக்கிறது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சக்ரபர்த்தி தற்போது சொல்லியிருக்கும் விஷயத்தைக் கேட்டு. 'வங்கிகளின் வாராக் கடன் உச்சபட்சமாக 35 சதவிகிதம் அதிகரித்திருக்கும் நிலையில், நடைமுறை அபாயம்

(சிஸ்டமிக் ரிஸ்க்) எதுவும் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார் அவர்.

கடந்த 2013-ல் மட்டும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக் கடன் ஏறக்குறைய 50 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. நிகர வாராக்கடன் ரூ.92,398 கோடியிலிருந்து 1,38,613 கோடியாகவும், மொத்த வாராக்கடன் 2,43,210 கோடியா கவும் உயர்ந்து, நம் அடிவயிற்றைக் கலக்குகிறது.

இதில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாராக்கடன் மட்டுமே 67,799 கோடி ரூபாய். பஞ்சாப் நேஷனல் பேங்கின் வாராக்கடன் 16,596 கோடி ரூபாய். பேங்க் ஆஃப் பரோடாவின் வாராக்கடன் 11,926 கோடி ரூபாய் என ஒவ்வொரு வங்கியின் வாராக்கடன் அளவு உள்ளபடியே பதைபதைக்க வைக்கிறது.

யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாராக்கடன் அளவு 10 சதவிகிதத்துக்குமேல் சென்றுவிட, இந்த வங்கியில் இத்தனை நாளும் ரகசியமாக நடந்த பல விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது வெளியே கசிய, இந்த வங்கியின் நிர்வாக இயக்குநரே விருப்ப ஓய்வில் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.

வங்கிகளின் வாராக்கடன் பற்றிய செய்திகள் இந்த லட்சணத்தில் இருக்க, அபாயம் எதுவும் இல்லை என்று ஆர்பிஐ கவர்னர் எப்படி சொல்கிறார்? இந்த வாராக்கடன் அளவை கணிசமாகக் குறைக்க ஒவ்வொரு வங்கியும் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று ஆர்பிஐ துணை கவர்னர் சொன்னாலும், அதற்கான நடைமுறை விதிகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்க வேண்டும்.

வாராக்கடன் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணமே, அரசியல்வாதிகளின் தலையீடுதான். யாருக்குக் கடன் தரவேண்டும், யாரிடமிருந்து கடனை திரும்பக் கேட்கக்கூடாது என்கிற விஷயங்களில் அரசியல்வாதிகள் தலையீடு செய்யாமல் இருந்தாலேபோதும், வாராக்கடன் பிரச்னை தீர்ந்துவிடும்! இதைச் செய்யும் துணிச்சலை வங்கி அதிகாரிகளுக்கு மத்திய அரசு தருமா?

- ஆசிரியர்.