ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

##~##

 ''இலக்கண ரீதியாகப் பார்த்தால், 'அவள்’ என்பது 'படர்க்கை’. இருப்பினும்,  'அவள்’ எப்போதுமே 'முன்னிலை’யில் இருப்பதற்குக் காரணம் பெண் களின் 'தன்னிலை’யைப் பற்றிப் பேசுவதுதான். மகிழ்ச்சி, கோபம், வேதனை,  ஆச்சர்யம் என்று தன் நிலைப் பற்றி எழுதுகிறவர்களே இதன் வாசகிகளாக இருப் பதால் 'அவள்’ என்பதும் 'தன்னிலை’தான்!'' 

- இப்படி கவித்துவமாக ஒரு விளக்கம் கொடுத்தார், முதல் இதழ் துவங்கி, இந்த 400-வது இதழ் வரையிலும் எங்களுடனேயே பயணிக்கும் வாசகிகளில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த கீதா!

''ஏதேது... இன்னும் கொஞ்சம் போனால் நானூறாவது இதழுக்கு ஒரு நாலடியாரே ரெடி செய்துவிடுவீர்கள் போலிருக்கிறதே?'’ என்று உரிமையோடு கேலி செய்தேன். 

அதுவரை கவிதாயினியாக இருந்தவர், சட்டென்று தத்துவ தளத்துக்குத் தாவி, ''நீளம் தாண்டும் போட்டியில் பங்கெடுப்பவர்களைப் பார்த்ததுண்டா... முன்னோக்கி ஓடுவதற்கு முன்பாக, பின்னோக்கி சில அடிகள் எடுத்து வைப்பார்கள். அதாவது முன்னோக்கி வேகமாக பயணிக்க வேண்டும் என்றால், அவ்வப்போது சற்று பின்னோக்கியும் பயணிக்க வேண்டும்’' என்றார்.

நமக்குள்ளே...

உண்மைதானே... இந்த நானூறாவது இதழைத் தயாரிக்கும் வேலையில் எங்கள் குழுவினருடன் கால இயந்திரத்தில் ஏறி பதினைந்து வருடங்கள் பின் னோக்கி பயணித்தோம். இந்தக் காலகட்டத்தில், எப்படி எல்லாம் உங்களின் 'அவள்' உருமாற்றம் பெற்றிருக்கிறது என்பதைப் புரட்டியபோது ஆர்வமும்... ஆச்சர்யமும் பொங்கியது! இதற்கு ஈடுகொடுத்து வாசகிகளும் எழுத்து நடை, உள்ளடக்கம், கட்டுரையின் அளவு... என்று அனைத்து விஷயங்களுக்கும் தங்களை எப்படி 'அடாப்ட்’ செய்து வருகிறீர்கள் என்பதைப் பார்க்கும்போது... பிரமிப்பும் பெருமிதமும் மேலிடுகிறது.

ஒரு சாம்பிளாக... முதல் இதழில் இடம்பிடித்த நடிகை ரேணுகாவை, 400-வது இதழுக்காக பார்த்தபோது... 'நேத்துதான் முதல் இதழ் வந்த மாதிரி இருக்கு... அதுக்குள்ள 400-வது இதழா...' என்று ஆரம்பித்து அவர் பேசியது... 'நாஸ்ட்டால்ஜிக்’!

இந்தக் காலகட்டத்தில் 'அவள்’ மட்டுமா மாறியிருக்கிறது. அன்று செல்போனை கையில் வைத்திருந்தவர்கள் குறைவு. இப்போது செல்போன் இல்லாதவர்கள் குறைவு. இண்டக்ஷன் ஸ்டவ், டி.டி.ஹெச்., எல்.இ.டி. டி.வி., லெகீங்ஸ், ஆர்கானிக் உணவு, மிரட்டும் மின்வெட்டு, வானுயர ஐ.டி கம்பெனி கட்டடங்கள், கறுப்பு எம்.ஜி.ஆரின் தே.மு.தி.க., இன்ஜினீயரிங் கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், எதார்த்த சினிமாக்கள்... என்று தமிழகம்தான் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது. கூடவே, குடும்ப அமைப்பிலும் ஏகப்பட்ட மாற்றங்கள்.

'இத்தகைய மாற்றங்களினால் நாம் இழந்தது என்ன... புதிதாக பெற்றது  என்ன’ என்பதைப் பற்றி உங்கள் சிந்தனையையும், இந்த இதழ் நிச்சயம் தூண்டும் என்றே நினைக்கிறேன்.

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்