Published:Updated:

விசாரணையை விரைந்து முடிக்குமா சிபிஐ?

விசாரணையை விரைந்து முடிக்குமா சிபிஐ?

விசாரணையை விரைந்து முடிக்குமா சிபிஐ?

விசாரணையை விரைந்து முடிக்குமா சிபிஐ?

Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் உள்பட பல்வேறு வழக்குகளில் யாருக்கும் தெரியாத குற்றப்பின்னணியை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த சிபிஇ, இப்போது ஒரு சாதாரண விஷயத்தில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருப்பது ஆச்சரியமே!  

சில ஆண்டுகள்முன், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி-க்கு தலைவராக இருந்தவர் சி.பி. பவே. இதே செபி அமைப்பில் முழுநேர உறுப்பினராக இருந்தவர் கே.எம். ஆப்ரஹாம். எம்.சி.எக்ஸ் நிறுவனம் எஸ்எக்ஸ் என்கிற பங்குச் சந்தையைத் தொடங்க அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, பவே மற்றும் ஆப்ரஹாம் மீது 'ஆரம்பகட்ட விசாரணை’ நடத்தி வருகிறது சிபிஐ. இந்தத் தகவல் வெளியுலகத்துக்கு தெரியவரவே, சிபிஐ மீது எல்லோரும்  கோபக்கணை வீசத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிபிஐ மீது இரண்டு வகையில் குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள். ஒன்று, செபியின் தலைவராக பவே இருந்தபோதுதான், எம்.சி.எக்ஸ் நிறுவனம் புதிய பங்குச் சந்தையைத் தொடங்க அனுமதி கிடைக்காமல் திண்டாடியது. இதற்கு காரணம் பவேதான் என குற்றம் சாட்டியது  எம்.சி.எக்ஸ். உண்மை அப்படியிருக்க, அவர் எப்படி அந்த நிறுவனத்துக்குச் சாதகமாக செயல்பட்டு இருக்க முடியும் என்பது முக்கியமான கேள்வி!

விசாரணையை விரைந்து முடிக்குமா சிபிஐ?

இதேபோல, நேர்மைக்கு பெயர்போனவர் ஆப்ரஹாம். இன்றைக்கு சஹாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதோ ராய், திஹார் ஜெயிலில் அடைபட்டிருக்க காரணம், இந்த ஆப்ரஹாம்தான். அப்படிப்பட்டவர் எந்த முறைகேட்டிலும் ஈடுபட வாய்ப்பில்லையே என்பது இன்னும் சிலரது கேள்வி.

சரி, இந்த இருவர் பற்றி சிபிஐ-க்கு ரகசிய தகவலேதும் கிடைத்திருக்கலாம். அதன் அடிப்படையில் சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கி இருக்கலாம் என்றாலும், ஆரம்பகட்ட விசாரணை என்பதால் அதை ரகசியமாக செய்திருக்கலாமே! இந்த தகவலை வெளியுலகுக்கு அம்பலப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன?  இப்படி கேட்கிறவர்களின் பட்டியலில் தனிநபர்கள் மட்டுமல்ல... சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் போன்ற மத்திய அமைச்சர்களும் அடக்கம்.

அமைச்சரோ, அதிகாரியோ, தனிமனிதரோ, யாரைப் பற்றி வேண்டுமானாலும் விசாரிக்கிற உரிமை சிபிஐ-க்கு உண்டு. என்றாலும், இந்த 'விசாரணை’யில் சிக்கியிருக்கும் இருவருமே 'நல்லவர்கள்’ என கருதப்படுவதால், இந்த 'விசாரணை’யை மிக விரைவாக முடித்து, சிபிஐ தனது முடிவை அறிவிப்பது அவசியம். இதை செய்வதன் மூலமே தேவை இல்லாத விமர்சனத்தை சிபிஐ தவிர்க்க முடியும்.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism