Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

சமீபத்தில் என் தோழியிடமிருந்து வந்திருந்த இ-மெயில், மிகவும் சிந்திக்க வைத்துவிட்டது.

அந்த மெயில்... ''ஜெர்மன் நாட்டுக்கு வேலை விஷயமாக சென்றிருந்த, எனக்கு மிகவும் தெரிந்த இந்தியர் இருவர், ஒரு ரெஸ்டாரன்ட்டில் நுழைந்தனர். வேண்டியவற்றை ஆர்டர் செய்தவர்கள்... பக்கத்து டேபிள்களில் பார்வையைப் பாய்ச்ச... எல்லா டேபிள்களிலுமே அளவான உணவே வைக்கப்பட்டிருக்க... துளியும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

'பிஎம்டபிள்யூ, பென்ஸ்... என்றெல்லாம் சொகுசு கார்களை உற்பத்தி செய்யும் பணக்கார நாட்டிலேயே இப்படி ஒரு அற்பத்தனம்?’ என்று பேசிச் சிரித்த இருவரும், அரைகுறையாகச் சாப்பிட்டு, எழ... செக்யூரிட்டிகள் தடுத்தனர். 'உணவை வீணடிக்கிறீர்களே?’ என்று பக்கத்து டேபிள் பெண்மணியும் கேட்க... 'எங்கள் காசு' என்று குரலை உயர்த்தினர் இருவரும்.

போலீஸார் வந்து சேர்ந்து, 'காசு உங்களுடையதாக இருக்கலாம். உணவு, எங்கள் நாட்டின் வளம். யார் வீணடித்தாலும் விடமாட்டோம். சோமாலியா போன்ற நாடுகளில் ஒருவேளை உணவுக்கே வழியில்லாமல் மக்கள் சிரமப்படும் நிலையிலும், உணவை வீணடிப்பது மனித குலத்துக்கு எதிரான பாவம்' என்று தலைகுனிய வைத்ததோடு, அபராதமும் வசூலித்தனர்.''

தோழியின் மெயிலைப் படித்து முடித்து, தினசரியைப் புரட்டினால்... 'உணவுப் பொருட்களை வீணடிக்கக் கூடாது என வலியுறுத்தும் கருத்துக்களை பள்ளி பாடத் திட்டத்திலேயே சேர்க்க வேண்டும் என்று மாநில கல்வி அமைச்சர்களுக்கு, இந்தியாவின் மத்திய உணவுத் துறை அமைச்சர் கடிதம்' என்றொரு செய்தி!

ஒரு நெல் மணியை உருவாக்குவதற்காக வயல்வெளியில் விவசாயி படுகின்ற சிரமம்... அந்த நெல் மணியை வாய்க்கு ருசியான உணவாகச் சமைக்க அடுக்களையில் அம்மா சந்திக்கின்ற அவஸ்தைகள்... இந்த இரண்டையுமே தெரிந்திருப்பவர்கள் உணவை வீணாக்குவார்களா?

'உணவை வீணடிக்கக் கூடாது' என்று திருவள்ளுவர், வாசுகி கதை எல்லாம் கேட்டு வளர்ந்த நாம், அதை அடுத்த தலைமுறைக்கு கடத்தினோமா தோழிகளே?

சிந்திக்க வேண்டிய கேள்வியல்லவா இது!

உரிமையுடன்

நமக்குள்ளே...


ஆசிரியர்