ஹலோ வாசகர்களே..!

இந்தியா உலக அளவில் சூப்பர் பவராக வளர வேண்டும் என்று நாம் எல்லாரும் ஆசைப்படுகிறோம். ஆனால், இன்றைக்கு நம் நாடு எப்படி இருக்கிறது என உலக வங்கி சொல்வதைப் பார்த்தால், அந்த ஆசையில் மண்தான் விழுகிறது.

சர்வதேச அளவில் உள்ள ஏழைகளில் சுமார் 33 சதவிகிதம்பேர் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சித் தகவலை உலக வங்கி சமீபத்தில் எடுத்துச் சொல்லி இருக்கிறது. இதில் கூடுதல் அதிர்ச்சி என்னவெனில், நைஜீரியா, பங்களாதேஷ் போன்ற பின்தங்கிய நாடுகளைவிட இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுதான்.

இத்தனைக்கும் இந்தியாவில் இயற்கை வளங்களுக்குப் பஞ்சமே இல்லை. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நிறைந்திருக்கும் மனிதவளம், உழைக்கக் காத்திருக்கும் மக்கள் என உலக நாடுகள் பொறாமைப்படும் நிலையில் நாம் இருந்தும்கூட நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை குறைவதற்குப் பதில் அதிகரிக்கவே செய்திருக்கிறது.

அரசியல்வாதிகளின் சுயநலமிக்க, தவறான ஆட்சிமுறை தவிர, வேறு எதுவும் இதற்கு காரணமாக இருக்க முடியாது. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் போட்ட திட்டங்கள் அனைத்துமே, மக்களுக்கு என்ன நன்மை தரும் என்று பார்ப்பதைவிட, அதனால் தங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்றுதான் பார்த்திருக்கிறார்கள். செலவழிக்கும் பணத்தில் பாதியை எடுத்துக்கொண்டு, மீதமுள்ளதையே மக்களின் வளர்ச்சிக்கு செலவு செய்திருக்கிறார்கள்.

இதனால்தான் பல லட்சம் கோடி ரூபாய் செலவழித்தபின்பும் ஏழைகளுக்குக் கிடைக்கவேண்டிய கல்வி கிடைக்காமலே இருக்கிறது; ஆரோக்கியம் என்பது ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இருக்கிறது. அடிப்படை வசதிகளைப் பெறாத அப்பாவி மனிதர்களை ஓட்டுக்கு மட்டும் பயன்படுத்தும் அரசியல்வாதிகள், அவர்களுடைய பொருளாதார மேம்பாட்டுக்கு எள்ளளவும் முயற்சி எடுக்கவில்லை.

இது தேர்தல் நேரம். அடுத்த சில மாதங்களில் புதிய ஆட்சி அமையவிருக்கும் சமயம். இதுநாள் வரை ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டும் என்ற எண்ணமே கொண்டிராத அரசியல்வாதிகள், இனியாவது மக்களின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைக்க வேண்டும். இந்தியா ஏழைகளின் தேசம் என்கிற சிறுமையை அடியோடு துடைத்தெறிய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இனிவரும் ஆட்சியாளர்கள் எடுக்காவிட்டால், உலகமும் நம்மை மதிக்காது. நம் மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.

- ஆசிரியர்.