ஹலோ வாசகர்களே..!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கிப் பெய்யும் தென்மேற்கு பருவமழையானது, இந்த ஆண்டில் சராசரியைவிடக் குறைவாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. பசிபிக் பிராந்தியத்தில் கடலின் மேற்பரப்பில் உருவாகியிருக்கும் வெப்பமான சூழ்நிலை காரணமாக (எல்நினோ), நம் நாட்டில் பெய்யும் தென்மேற்கு பருவமழை நீண்டகால சராசரியில் 95 சதவிகித அளவுக்கே இந்த ஆண்டு பெய்ய வாய்ப்புள்ளதாம்.

இது ஒரு கணிப்புதானே என்று நாம் அசட்டையாக இருக்கத் தேவையில்லை. காரணம், கடந்த ஐம்பது ஆண்டுகாலத்தில் சராசரியாக அல்லது சராசரிக்கும் குறைவாக மழை பெய்யும் என வானிலை மையம் சொன்னபோது நடக்கவே செய்திருக்கிறது. எனவே, இந்த ஆண்டும் குறைந்த அளவே மழை பொழியும் என்கிற எச்சரிக்கை உணர்வோடு நாம் இருந்தால்தான், இதைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி நாம் சிந்திக்க ஆரம்பிப்போம்.

இதற்கு முதலில் நாம் செய்யவேண்டியது, மழைநீரை தேக்கிவைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதுதான். தமிழகம் முழுக்க உள்ள சிறு அணைகள், கால்வாய்கள், ஏரிகளைத் தூர்வாரி, ஆழப்படுத்துவதன் மூலம் மழைநீரை சேமித்துவைத்து, அதை விவசாயத்துக்குப் பயன்படுத்த மாநில அரசாங்கமும் பொதுப்பணித் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீரை சேமித்துவைக்க இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி நீர் கிடைக்கவில்லை, பெரியாறு நீர் வரவில்லை எனப் பிற்பாடு நமது மாநில அரசாங்கம் புலம்பி எந்தப் பயனும் இல்லை.

இந்த விஷயத்தில் விவசாயிகளும் அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருக்காமல், தங்கள் பகுதிகளில் உள்ள நீராதாரங்களை வளப்படுத்தும் வேலையில் இறங்க வேண்டும்.

இந்தச் சமயத்தில் மத்திய அரசாங்கமும் சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழை அளவு குறைந்தால், விவசாய உற்பத்தி பாதிப்படைந்து, உணவு தானியங்களின் விலை பாரதூரமாக உயர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனைத் தடுக்கவேண்டுமெனில் மத்திய அரசாங்கம் தனது பாதுகாப்பில் உள்ள கூடுதல் உணவு தானியங்களை நியாய விலைக் கடைகள் மூலமும் வெளிச்சந்தை மூலமும் விநியோகம் செய்யவேண்டும். அப்போதுதான் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்புக்குள்ளாகாமல் தடுக்க முடியும்.

வானிலை ஆய்வு மையம் இப்போது வெளியிட்டிருக்கும் கணிப்பு புதிதாக அமையவிருக்கும் மத்திய அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, நம் எல்லாருக்குமே நிச்சயம் ஒரு சவால்தான். இந்தச் சவாலை துணிவோடு எதிர்கொள்வதைத் தவிர, நமக்கு வேறு வழியில்லை.

- ஆசிரியர்.