Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

ரங்கள் நிறைந்த, முடிவே இல்லாத நீள்சாலைகளில், குடும்பத்தினருடன் இசையை ரசித்தபடியே பயணிப்பது சுகமான அனுபவம். அப்படி ஓர் அரிதான சந்தர்ப்பம் சமீபத்தில் வாய்த்தது. இடையில் இசையை நிறுத்திவிட்டு உள்ளே புகுந்தார் 'எப்.எம் ரேடியோ' அறிவிப்பாளர். அன்றைய தினம் அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு... 'சுற்றுலா’.

''சென்னையில் இருக்கும் சுற்றுலா தலம் ஒன்றுக்கு போகவேண்டும் என்றால்... நீங்கள் எந்த இடத்துக்குப் போவீர்கள்?’ - தனக்கு போன் செய்த நேயர்கள் பலரிடமும் இதே கேள்வியை சளைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தார். 'எக்ஸ்பிரஸ் அவென்யூ, சத்யம் சினிமாஸ், மாயாஜால், ஃபீனிக்ஸ் மால்...' என்றே பதில் தந்துகொண்டிருந்தனர் நேயர்கள்.

நமக்குள்ளே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுமார் ஒரு மணி நேரமாக அந்த அறிவிப்பாளர் போராடியும்... சினிமா திரையரங்குகளையும், ஷாப்பிங் மால்களையும் தாண்டி வெளியே வந்து ஒருவர்கூட யோசிக்கவில்லை. ஷாப்பிங் போவது, சினிமா பார்ப்பது இதெல்லாம்தான் சுற்றுலா என்று திடமாக கருதும் அளவுக்கு, மாநகர் சென்னையிலேயே பலரின் பார்வை மழுங்கிக் கிடப்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

சரித்திரப் புகழ்வாய்ந்த மாமல்லபுரம் யாருடைய நினைவிலும் தோன்றவில்லை; பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரமும் அவர்களுடைய பட்டியலில் இல்லை; மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், வள்ளுவர் கோட்டம், வேடந்தாங்கல் சரணாலயம், அடையாறு ஆலமரம், வண்டலூர் உயிரியல் பூங்கா போன்றவையும் கணக்கில் வரவில்லை. சுற்றுலா என்றாலே ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்த இவை அனைத்தும்... இப்போது பின்னோக்கி போய்விட்டன.

ஆன்மிக சுற்றுலா, வரலாறு சார்ந்த சுற்றுலா, இன்பச் சுற்றுலா என்றிருந்த காலம் மாறி... ஷாப்பிங் செல்வதற்கென்றே சுற்றுலா செல்லும் வழக்கம் உருவாகி பலமாக வேரூன்றி நிற்கிறது தற்போது. இந்த 'ஷாப்பிங் டூரிஸம்' தோன்றியது மேற்கத்திய நாடுகளில்தான். ஆனால், அங்கேயெல்லாம் சாகச சுற்றுலா, கலாசார சுற்றுலா... ஆகியவையும் பிரபலமாகவே இருக்கின்றன ஆனால், இங்கோ... ஷாப்பிங் டூரிஸம் மட்டுமே உயர்த்திப் பிடிக்கப்படுகிறது!

அடிக்கடி பார்க்கவோ... அனுபவிக்கவோ முடியாத ஒன்றை பார்க்கச் செல்வதுதானே சுற்றுலா. ஷாப்பிங் மால்களும் சுற்றுலா தலங்களே... அவற்றை அடிக்கடி பார்க்க முடியாதவர்களுக்கு!

மற்றவர்களுக்கு..?

யோசியுங்கள் தோழிகளே!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism