Published:Updated:

முறைகேட்டைத் தடுத்து நம்பிக்கையை வளர்த்திடுங்கள்!

முறைகேட்டைத் தடுத்து நம்பிக்கையை வளர்த்திடுங்கள்!

முறைகேட்டைத் தடுத்து நம்பிக்கையை வளர்த்திடுங்கள்!

முறைகேட்டைத் தடுத்து நம்பிக்கையை வளர்த்திடுங்கள்!

Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

என்.எஸ்.இ.எல் சந்தையில் நடந்த முறைகேடு தொடர்பாக, இந்தச் சந்தையை உருவாக்கி நடத்திவந்த ஜிக்னேஷ் ஷாவை மும்பை காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு பத்து மாதம் கழித்து

முறைகேட்டைத் தடுத்து நம்பிக்கையை வளர்த்திடுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போதுதான் கைது செய்திருக்கிறது.    

பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்த செபி என்கிற அமைப்பு இருப்பதுபோல, என்.எஸ்.இ.எல் என்னும் ஸ்பாட் சந்தையைக் கட்டுப்படுத்த எந்த அமைப்பும் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டுதான் இந்த முறைகேட்டை செய்திருக்கிறார் ஜிக்னேஷ் ஷா என்கிறார்கள் சிலர்.

இது உண்மையே என்று நம்பும் அளவுக்கு இருப்பில் இல்லாத பொருட்களை எல்லாம் ஒன்றுக்குப் பலமுறை விற்று, மக்கள் பணத்தைச் சூறையாடி இருக்கிறார்கள் ஜிக்னேஷ் ஷாவும், அவருக்கு நெருக்கமான வேறு சிலரும். இதனால் மக்களின் பணம் 5,600 கோடி ரூபாய் பாழாய்ப் போயிருக்கிறது.

இந்தப் பிரச்னையில் இனி அரசாங்கம் செய்யவேண்டியது இரண்டே இரண்டு விஷயங்கள்தான். முதலாவது, ஜிக்னேஷ் ஷாவிடம் நன்கு விசாரணை நடத்தி, மக்கள் பறிகொடுத்த 5,600 கோடி ரூபாயை அவரிடமிருந்து பிடுங்கி, உரியவர்களுக்குத் திரும்பத் தரவேண்டும். இதற்காக ஜிக்னேஷ் ஷாவுக்குச் சொந்தமான எல்லா சொத்துக்களையும் விற்கத் தயங்கக்கூடாது. மக்களிடமிருந்து திரட்டப்பட்ட முதலீட்டை  திருப்பித்தரச் சரியான திட்டத்தைக் கொடுக்கத் தவறிய சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதோ ராயை உச்ச நீதிமன்றம் கையாளுவதைப்போல, என்.எஸ்.இ.எல் விஷயத்திலும் செய்தால் மட்டுமே மக்களின் பணம் திரும்பக் கிடைக்கும். இனி, இந்தத் தவறை செய்யவே கூடாது என்கிற பயமும் எல்லாருக்கும் வரும்.

முறைகேட்டைத் தடுத்து நம்பிக்கையை வளர்த்திடுங்கள்!

இரண்டாவது விஷயம், அப்பாவி மக்கள் முதலீடு செய்யும் எல்லா அமைப்புகளையும் கண்காணிக்கிற வேலையை அரசாங்கம் கட்டாயம் செய்தாக வேண்டும். சாதாரணச் சீட்டுத் திட்டமானாலும் சரி, கோடிகளில் புரளும் நிதிச் சந்தையானாலும் சரி, அதன் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, தவறு நடக்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலமே மக்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு, முதலீட்டுச் சந்தை மீது மக்கள் நம்பிக்கை இழக்காமல் இருப்பார்கள்.

இந்த இரண்டு விஷயங்களையும் அரசாங்கம் செய்யத் தவறும்பட்சத்தில் கொள்ளையர்களின் கூடாரம்தான் கொழிக்கும். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிதான் பாதிக்கப்படும் என்பதை மறக்கக் கூடாது!  

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism