Published:Updated:

நிதி அமைச்சரின் உடனடி கவனத்துக்கு..!

நிதி அமைச்சரின் உடனடி கவனத்துக்கு..!

நிதி அமைச்சரின் உடனடி கவனத்துக்கு..!

நிதி அமைச்சரின் உடனடி கவனத்துக்கு..!

Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

நிதி அமைச்சரின் உடனடி கவனத்துக்கு..!

மோடியின் அமைச்சரவையில் அவருக்கு அடுத்தபடியாக நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார் அருண் ஜெட்லி. பிரதமர் மோடியிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருப்பதுபோல, நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடமும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கவே செய்கிறது. என்றாலும், முக்கியமான நான்கு விஷயங்களில் நிதி அமைச்சர் தனது கவனத்தை உடனடியாகச் செலுத்தியாக வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில், நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பணவீக்கம். பணவீக்கத்துக்கு முக்கியக் காரணமாக இருப்பது, உணவுப் பொருட்களின் விலை உயர்வு. விவசாய உற்பத்தி குறைந்துவருவது ஒருபக்கம் எனில், உற்பத்தியாகி வரும் விளைபொருட்களை வர்த்தகர்கள் பதுக்கிவைத்து, கொள்ளை லாபம் பார்க்கும் கொடுமையும் நடக்கவே செய்கிறது. விளைநிலத்தில் உற்பத்தியான பொருள், மக்கள் கையில் போய்ச் சேருகிற வரை எந்தவகையான பதுக்கலும், அநியாய விலை உயர்வும் இல்லாதபடி அரசாங்கம் பார்த்துக்கொண்டால் மட்டுமே உணவுப் பொருட்களின் விலை குறைந்து, பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கும்.  

இரண்டாவதாக, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை. ஓராண்டு காலத்துக்குமுன் ஏறக்குறைய 88 பில்லியன் டாலர்களாக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, தற்போது 32 பில்லியன் டாலர்களாகக் குறைந் திருக்கிறது. இது நல்ல விஷயம் என்றாலும், தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி மீண்டும் அதிகரிக்கும்பட்சத்தில் இந்தப் பற்றாக்குறை அபாய அளவைத் தாண்டிச் செல்ல நிறைய வாய்ப்புண்டு. ஏற்றுமதியைக் கணிசமாக உயர்த்தினால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

நிதி அமைச்சரின் உடனடி கவனத்துக்கு..!

மூன்றாவதாக, ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துவரும் மானியச் செலவு. மானியம் என்பது இடம், பொருள், காலத்துக்கேற்ப அவசியமானதுதான். ஆனால், நம் நாட்டில் மானியம் என்பது உரிய மக்களுக்குப் போய்ச் சேருவதே இல்லை. உதாரணமாக, சாதாரண மனிதனுக்கு குறைந்த விலையில் பெட்ரோல் அளித்தால், சொகுசு கார்களும் அதே விலையில் பெட்ரோலை வாங்குகின்றன. இதனைத் தடுக்க இனி எந்த மானியமாக இருந்தாலும், அதைத் தகுதியானவர்களுக்கு மட்டுமே தரவேண்டும்.

நான்காவதாக, அரசாங்கம் செய்யும் தேவையில்லாத செலவுகள். உதாரணமாக, காங்கிரஸ் ஆட்சியில் 100 நாள் வேலை திட்டம் என்கிற பெயரில் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் வீணாகச் செலவழிக்கப்பட்டது. இவ்வளவு செலவழித்தும் இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே, இதுமாதிரியான வீண்செலவுகளை உடனடியாகக் குறைக்க வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களிலும் நிதி அமைச்சர் முன்னுரிமை தந்து செயல்பட்டாலே போதும், பொருளாதார மாற்றம் வேகமாகத் தெரிய ஆரம்பித்துவிடும்!

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism