Published:Updated:

விலைவாசியைக் குறையுங்கள்!

விலைவாசியைக் குறையுங்கள்!

விலைவாசியைக் குறையுங்கள்!

விலைவாசியைக் குறையுங்கள்!

Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

விலைவாசியைக் குறையுங்கள்!

கடந்த மே மாதத்துக்கான உணவு பொருட்களுக்கான பணவீக்கம் (கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டெக்ஸ் - (CPI) சென்ற மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.28 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தச் செய்தி மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தாலும், ஒவ்வொரு உணவுப் பொருளையும் தனித்தனியாகப் பார்த்தால் வருத்தமே வருகிறது. காரணம், பால், பருப்பு, காய்கறி, பழங்களின் விலை குறைவதற்குப் பதிலாக, அதிகரிக்கவே செய்திருக்கிறது. நகர்ப்புறங்களில் விற்கப்படும் காய்கறிகளின் விலையைவிட கிராமப்புறங்களில்  நான்கு மடங்கு கூடுதல் விலையில் விற்கப்படுவது மேலும் கவலையைத் தருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருப்பது ஒருபக்கமிருக்க, தென்மேற்கு பருவமழை கடந்த ஒருவார காலத்தில் சராசரியைவிட 48% குறைந்திருக்கிறது. தவிர, எல்நினோ தாக்கத்தால் மழையளவு குறிப்பிடத்தகுந்த அளவில் இன்னும் குறையலாம். இதனால் இனிவரும் மாதங்களில் உணவுப் பொருட்களுக்கான விலை இன்னும் உயரவே செய்யும் என்றே சந்தை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மோடியின் தலைமையில் உருவாகி இருக்கும் இந்தப் புதிய அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, உணவுப் பொருட்களுக்கான விலையேற்றத்தைத் தடுத்தாக வேண்டும். இதற்கு மத்திய அரசிடம் தேவைக்கும் மிக அதிகமாகவே இருக்கும் உணவுப் பொருட்களை வெளிச்சந்தைக்கு உடனடியாகக் கொண்டுவந்து விற்க வேண்டும். இதன் மூலமே உணவுப் பொருட்களின் விலையை உடனடியாகக் குறைக்க முடியும். அரிசிக்கும் கோதுமைக்கும் அடிப்படை ஆதார விலையை அரசாங்கம் உயர்த்திக்கொண்டே போவதால், உணவுப் பொருட்களின் விலையும் உயர்கிறது. இந்த விஷயத்தில் அரசாங்கம் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

விலைவாசியைக் குறையுங்கள்!

எல்லாவற்றுக்கும் மேலாக, விவசாய உற்பத்தி என்பது ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், விவசாய நிலங்கள் வளம் குறைந்து வருவதே. அளவுக்கதிகமான உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும், வீரிய விதைகளையும் பயன்படுத்துவதால், விளைநிலங்கள் தன் வளத்தை  இழந்து, மலட்டுத்தன்மையை அடைகின்றன.

இப்படி பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி உற்பத்தியாகும் உணவுப் பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு வர்த்தகர்கள் விற்பதால், விவசாயிகளுக்குப் பயனில்லை; மக்களும் அதிகப் பணம் தந்தே வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. காங்கிரஸ் அரசாங்கம் தனது ஆட்சிப் பொறுப்பை இழக்க  முக்கியக் காரணமே, இந்த விலைவாசி உயர்வுதான். மோடி அரசாங்கம் இந்தப் பிரச்னையை ஆரம்பம்தொட்டே கவனித்து, கட்டுப்படுத்தவில்லை எனில், மக்களின் மாபெரும் அதிருப்திக்கு உள்ளாக வேண்டியிருக்கும்!

- ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism