Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

''எனக்குத் தெரிந்த பெண் ஒருவர், தன் 8 வயது மகளுக்கு ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருப்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். 'என்னா மாதிரி ஜாலியா ஸ்டேட்டஸ் மெசேஜ் போடறா தெரியுமா? அவ அப்லோடு பண்ற போட்டோவெல்லாம் லைக்ஸ் அள்ளுது... கமென்ட் பின்னுது... பீப்பிள் டாக்கிங் அபவ்ட் திஸ் எகிறுது!’ என்று அவர் சொல்லச் சொல்ல, எனக்குக் கோபம் கோபமாக வந்தது.

அறிந்தவர்... அறியாதவர், நல்லவர்... கெட்டவர் என்று கோடிக்கணக்கானோர் புழங்கும் ஓர் அகண்ட வெளியில், ஏதுமறியா ஒரு பச்சைக் குழந்தையையும் புழங்கவிடுவது எந்த அளவுக்குச் சரி? ஒரு குழந்தையை எதிரில் வைத்துக்கொண்டு பேசுகிறோம் என்கிற இங்கிதமே இல்லாமல், எத்தனை பேர் 'ஏ ஜோக்' அடிப்பார்கள்.... என்னென்ன படங்களை அப்லோடு செய்வார்கள்... இதெல்லாம் எட்டு வயதுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், அவளுடைய அம்மாவின் அறிவுக்கும் எட்டவில்லையே!''

நமக்குள்ளே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- இப்படி ஏகத்துக்கும் ஆதங்கத்துடன் கடிதம் அனுப்பியிருந்தார் ஒரு வாசகி.

அப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் குழந்தைகளே பொய்யான வயதைக் கொடுத்து ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு ஆரம்பிப்பது ஒருபுறம் என்றால், பெற்றோர்களே பொய்யான பிறந்த தேதியைப் பதிவு செய்யச் சொல்வதும் நடக்கத்தான் செய்கிறது.

இத்தகைய நிலையில், '13 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், பெற்றோர் ஒப்புதல் மற்றும் கண்காணிப்புடன் ஃபேஸ்புக் கணக்கு துவங்க அனுமதித்துவிட்டால் என்ன?’ என்கிற யோசனைக்கு வந்திருக்கிறது ஃபேஸ்புக் நிர்வாகம்.

கேட்டால்... ''ஃபேஸ் புக், இப்போது கைபேசியிலேயே வந்துவிட்டது. இதைப் பார்க்காதே, இதற்குள் போகாதே என்று தடைபோட்டால்தான் போய்ப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை சிறார்களுக்கு வேகம் எடுக்கும். ஸ்கூல் புராஜெக்ட் என்று பொய் சொல்லி, நெட் சென்டர்களுக்கு ஓடக்கூடும்'' என்று காரணம் சொல்லக்கூடும்.

இதிலும் கொஞ்சம் உண்மை இருக்கத்தானே செய்கிறது. உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவரும் இக்காலத்தில் எல்லாவற்றிலும் 'தடைகள்’ உதவி செய்யாது. குழந்தைகளுக்கு 'குட் டச், பேட் டச்' கற்றுக்கொடுப்பதுபோல, சமூக வலைதளங்களில் எப்படியெல்லாம் சிறு பிரச்னை துவங்கி, பெரும் ஆபத்து வரை வருவதற்கு வாய்ப்பியிருக்கிறது என்பதைச் சொல்லி வளர்ப்பதுதான் சிறந்த தீர்வாக இருக்கும் என்று தோன்றுகிறது.

என்ன தோழியரே... நீங்களும் உங்கள் கருத்துக்களைப் பகிருங்களேன்!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism